3வது போட்டியிலிருந்து அவசரமாக விலகிய அஸ்வின்.. காரணம் என்ன? கடைசி 3 நாட்களில் விளையாடப்போவது யார்?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானாலும் பென் டுக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 133* (118) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

விலகிய அஸ்வின்:
முன்னதாக இந்த போட்டியில் ஜாக் கிராவ்லியை அவுட்டாக்கிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும் 184 இன்னிங்சில் 500 விக்கெட்டுகளை கடந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார்.

இந்நிலையில் ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக தன்னுடைய குடும்பத்தில் தவிர்க்க முடியாத அவசர நிலைமை ஏற்பட்டுள்ளதால் அஸ்வின் இப்போட்டியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

இந்த நேரத்தில் அஸ்வினுக்கு பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் ஆதரவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை இந்திய அணிக்கு விளையாடுவேன் என்ற கருத்தைக் கொண்ட அஸ்வின் இப்படி பாதியிலேயே ஒரு போட்டியில் விலகுகிறார் என்றால் நிச்சயம் அவருடைய குடும்பத்தில் ஏதோ ஒரு அவசர நிலைமை ஏற்பட்டிருக்கலாம். எனவே அதை புரிந்துக் கொள்ளும் ரசிகர்கள் அவருடைய குடும்பத்தில் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நேர்மையை பற்றி பேசும் அஸ்வின் இதை திட்டமிட்டு வேணும்னு செய்யலாமா? அலெஸ்டர் குக் கடுமையான விமர்சனம்

அதனால் கடைசி 3 நாட்களில் 10 வீரர்கள் மற்றும் 1 சப்ஸிடியூட் வீரருடன் இந்தியா விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஏற்கனவே இந்த தொடரிலிருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளது பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அஸ்வினும் இப்படி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisement