இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ்கான் கான் 62 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் அதிரடியாக விளையாடி 207/2 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானாலும் பென் டுக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 133* (118) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்து வருகிறார். அதனால் 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள அந்த அணி இந்தியாவை விட 238 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.
அஸ்வின் இப்படி பண்ணலாமா:
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ஓவரில் பந்தை அடித்து விட்டு பிட்ச்சின் நடுவே ஓடினார். அதற்காக அடிப்படை விதிமுறைப்படி இந்தியாவுக்கு அம்பயர் 5 ரன்கள் பெனால்டி வழங்கியதால் இங்கிலாந்து தங்களுடைய இன்னிங்ஸை 0/0 என்பதற்கு பதிலாக 5/0 என்று துவங்கியது.
இந்நிலையில் இந்தியா பந்து வீசும் போது பந்து சுழல வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அஸ்வின் அப்படி பிட்ச் நடுவே ஓடியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பொதுவாக நேர்மைத்தன்மை பற்றி பேசக்கூடிய அஸ்வின் இப்படி நடந்து கொள்ளலாமா என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்படுமாறு.
“அது வேண்டுமென்றே நடந்ததா? என்று கேட்டால் ஆம் வேண்டுமென்று தான் நடந்தது. அது பிட்ச்சின் நடுவே தொந்தரவு ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஏனெனில் தாம் பந்து வீசும் போது பிட்ச்சிலிருந்து அஸ்வின் உதவியை பெற விரும்புகிறார். பொதுவாக மூன்றாவது இன்னிங்சில் தான் அப்படி செய்வார்கள். ஆனால் இப்போட்டியில் 150 – 200 ரன்கள் முன்னிலையில் இருக்கும் போதே நீங்கள் பிட்ச்சில் மேலும் கீழும் ஓடுகிறீர்கள்”
இதையும் படிங்க: அதை செய்யாம நிக்காதீங்க.. அஷ்வினை வாழ்த்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே முக்கிய கோரிக்கை
“இதில் நேர்மைத் தன்மை இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் இங்கிலாந்தை எப்படியாவது 400 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய பவுலர்கள் பந்து வீச உள்ளனர். இருப்பினும் பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதால் அதற்கு வாய்ப்பு குறைவாகவே இருப்பது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.