அதை செய்யாம நிக்காதீங்க.. அஷ்வினை வாழ்த்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே முக்கிய கோரிக்கை

- Advertisement -

ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானாலும் பென் டுக்கெட் இந்திய பவுலர்களை அதிரடியாக விளையாடி சதமடித்து 133* (118) ரன்கள் குவித்துள்ளார். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 207/2 ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து இன்னும் 232 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

- Advertisement -

வாழ்த்திய கும்ப்ளே:
முன்னதாக இந்த போட்டியில் ஜாக் கிராவ்லியின் விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். சொல்லப்போனால் வெறும் 184 இன்னிங்ஸில் 500 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் அனில் கும்ப்ளேவை முந்தி அதிவேகமாக 500 விக்கெட்டுகளை எடுத்த இந்தியர் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார்.

இந்நிலையில் 700க்கும் குறைவான டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்காமல் கேரியரை முடிக்காதீர்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அனில் கும்ப்ளே வாழ்த்துடன் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஷ் வாழ்த்துக்கள். 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களுக்காக நான் பெருமையடைகிறேன். நீங்கள் 600, 625, 700 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்”

- Advertisement -

“நீங்கள் எங்கே முடிப்பீர்கள் என்பது தெரியாது. ஆனால் அதற்கு குறைவாக நிற்காதீர்கள். 13 வருடங்களுக்கு முன்பாக அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அறிமுகமானார். அதில் முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள் எடுத்த அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக தொடர்ந்து செயல்படுவது எளிதல்ல. தற்போது 98 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்பது அபாரமானதாகும்”

இதையும் படிங்க: நீங்க எப்போதுமே வின்னர் தான்.. 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினை மனதார வாழ்த்திய – சச்சின் டெண்டுல்கர்

“நிறைய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு செய்யும் அவர் திறமை கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருக்கு வாழ்த்துக்கள். நீண்ட காலமாக அவர் இந்திய அணிக்காக அசத்தி வருகிறார். இந்த போட்டி சற்று சவாலாக இருக்கிறது. ஆனால் இது போன்றவற்றில் அவர் வேலை செய்யக் கூடியவர். நீண்ட காலமாக இது போன்ற சவால்களை சமாளிக்கும் வேலைகளை செய்து அவர் அசத்தி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement