என்னுடைய பந்துவீச்சில் உள்ள சக்ஸஸிற்கு காரணமே இதுதான். ரகசியத்தை பகிர்ந்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜூலை 12-ஆம் தேதி துவங்கி நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Ashwin 1

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தம் 131 ரன்களை விட்டுக் கொடுத்து 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவரது இந்த பந்துவீச்சே இந்தியாவிற்கு வெளியே அவர் பதிவு செய்த சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. இந்நிலையில் இந்த முதலாவது போட்டி முடிந்த பின்னர் வர்ணனையாளர்களான இயான் பிஷப் மற்றும் சாமுவேல் பத்ரி ஆகியவருடன் நடந்த உரையாடலின் போது தனது இந்த சிறப்பான பந்துவீச்சிக்கு என்ன காரணம்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

Ashwin 2

இது குறித்து அவர் கூறுகையில் : எப்பொழுதுமே நான் பந்து வீசும் போது என்னை ஒரு பேட்ஸ்மேனாக நினைத்து பந்து வீசுவேன். முதலில் சில ஓவர்கள் என்னுடைய ரிதத்தை பிடித்து விட்டால் அதன் பிறகு வித்தியாசமான ஆங்கிள் மற்றும் என்னிடம் இருக்கும் ரவுண்ட் ஆர்ம்பால், டாப்ஸின், ஓவர் ஸ்பின், தட்டையான பந்துகள் என அனைத்து வகையான பந்துகளையும் பேட்ஸ்மன்களுக்கு எதிராக பயன்படுத்துவேன்.

- Advertisement -

அதோடு நான் ஒரு பேட்ஸ்மேனாக யோசிப்பது ஏனெனில் : நான் பந்துவீசும் போது ஒரு பேட்டர் முனையில் இருந்து யோசித்தால் பேட்ஸ்மேனின் கால் எங்கு நகரும், அவர்கள் எங்கு ரன்களை குவிக்க ஆசைப்படுகிறார்கள்? என்பது எனக்கு தெரியும்.

இதையும் படிங்க : தனி ஒருவனாக தூக்கிய கான்வே, பொல்லார்ட்டின் காட்டடி எம்ஐ அணியை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது எப்படி?

அவ்வாறு நான் எனக்கு எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் போது அதற்கு ஏற்றவாறு பீல்டர்களை நிறுத்தி அவர்கள் ரன் குவிக்க முடியாமலும், பந்தை தடுக்க முடியாத வகையிலும் வீசுவேன். அப்படி வீசும் போது விக்கெட்டுகள் தானாக கிடைக்கும் என தனது சக்சஸ் சீக்ரெட் குறித்து அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement