
நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டியுமே பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில் இன்று நடைபெற இருக்கும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் இந்த தொடரின் மிகப்பெரிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த போட்டியில் தோனி மற்றும் ரோஹித் சர்மா இவரும் விளையாடுவார்களா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. அதோடு இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டி குறித்து கூறியதாவது : தோனி இன்றைய ஆட்டத்திலும் விளையாடுவாரா? என்பது எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் நிச்சயம் விளையாட மாட்டார் என்பது என்னுடைய கருத்து. அதேபோன்று ரோகித் சர்மாவும் தசை நார் கிழிவு காரணமாக விளையாடாமல் இருந்து வருவதால் அவரும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன்.
தற்போதைக்கு சூரியகுமார் யாதவ் பார்மிற்கு வர சேப்பாக்கம் மைதானம் அவருக்கு சாதகமாக இருக்கும். முற்றிலுமாக இந்த போட்டியை பொறுத்தவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுக்கும் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் – விவரம் இதோ
அந்த வகையில் அவர்கள் இந்த போட்டியின் போது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி சி.எஸ்.கே அணியை தடுத்து நிறுத்தினால் நிச்சயம் அவர்களிடம் இருக்கும் பேட்டிங்கை வைத்து வெற்றிபெற முடியும். மற்றபடி சிஎஸ்கே அணி இந்த போட்டியில் முன்னிலை பெற அதிக வாய்ப்புள்ளதாக அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.