ஐ.பி.எல் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul and Jadeja
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது.

ஜடேஜாவின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் :

பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டெல்லி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 40 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 75 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது கே.எல் ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய ஆட்டநாயகன் விருதினை பெற்றதன் மூலம் அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மாபெரும் சாதனை ஒன்றினை ஐபிஎல் போட்டிகளில் அவர் சமன் செய்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதினை வென்ற இந்திய வீரராக 17 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்தினை பிடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க தான் தப்பு கணக்கு போட்டுட்டோம்.. டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ரியான் பராக் பேட்டி

இவ்வேளையில் அவரது சாதனையை நேற்று கே.எல் ராகுல் சமன் செய்தார். அவர் நேற்று பெற்ற ஆட்டநாயகன் விருது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது 17-வது விருதாகும். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ரோகித் சர்மா (21), விராட் கோலி (20), மற்றும் எம் எஸ் தோனி (18) ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement