நம்மள விட ஒருத்தன் பெஸ்ட்டா இருக்க கூடாதுன்னு ஈகோ பாக்காதீங்க, ஹர்பஜனுக்கு அஷ்வின் பதிலடி கொடுத்தாரா? பரபரக்கும் வீடியோ

Harbhajan
- Advertisement -

பொதுவாக இந்த உலகில் வல்லவனுக்கு வல்லவன் இருப்பார் என்று சொல்வார்கள். அதே போல கிரிக்கெட்டிலும் 10,000 ரன்கள் என்ற மெகா மைல்கல்லை முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொட்ட சுனில் கவாஸ்கர் சிறந்த வீரர் என்று அனைவரும் பாராட்டினர். ஆனால் அடுத்த தலைமுறையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் அதிவேகமாக தலா 10000 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் அவரை விட சிறந்தவர் என்று நிரூபித்தார். தற்போது அவரையும் மிஞ்சம் வகையில் விராட் கோலி செயல்படுகிறார். இப்படி தொடர்வது இயற்கையின் நியதி என்றும் சொல்லலாம்.

ஆனாலும் இந்தியாவில் இருக்கும் சில முன்னாள் வீரர்கள் தங்களுடைய இடத்தில் அடுத்த தலைமுறை வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாடும் போது அவர்களை பாராட்டாமல் வன்மத்துடன் விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கங்குலி தலைமையில் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்த ஹர்பஜன் சிங் 2011க்குப்பின் வயது காரணமாக சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
அதன் காரணமாக தலைமுறையை உருவாக்க நினைத்த கேப்டன் தோனி ரவீந்திர ஜடேஜா – ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தார். தற்போது அவர்கள் எதிரணியை எந்த அளவுக்கு தெறிக்க விடுகிறார்கள் என்பதிலேயே அது சரியான முடிவு என்பதை புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத ஹர்பஜன் சிங் சமீப காலங்களாகவே தம்மை மிஞ்சி தனது சாதனைகளை உடைத்து வரும் அஷ்வின் மீது தேவையற்ற விமர்சனங்களை வைத்து அவ்வப்போது வன்மத்தை வெளிப்படுத்தி வருவதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் தாம் சிறந்தவர் என்பதற்காக அடுத்த தலைமுறையில் சிறப்பாக ஒருவர் சிறப்பாக செயல்படக்கூடாது என்ற எண்ணத்துடன் சில முன்னாள் வீரர்கள் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று பேசுவதை நிறுத்த வேண்டுமென ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில் யாரது பெயரையும் குறிப்பிடாமல் அவர் பேசினாலும் ஹர்பஜன் சிங்கை தான் குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அந்த வீடியோவில் அஸ்வின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாம் தொடர்ந்து இங்கே நாம் தான் சிறந்தவர் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் திடீரென்று அடுத்த தலைமுறையை சேர்ந்த ஒருவர் வரும் போது அவரிடம் நாம் “நீங்கள் சற்று நேரம் காத்திருக்க முடியுமா? இதை எப்படி செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்று கூறுகிறோம். எனவே எப்போதும் நம்மை விட சிறந்தவர் ஒருவர் இருப்பார் என்பதை நாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம்மால் இன்றைய நிதர்சனத்தை புரிந்து கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அப்போது தான் “எங்களது காலத்தில் நாங்கள் எப்படி விளையாடினோம் தெரியுமா” என்று பெருமை பேசுவதை நம்மால் நிறுத்த முடியும்”

“அந்த காலங்களில் ஒரு பவுலர் ஒரே இடத்தில் தொடர்ந்து பந்து வீசுவார். அவரது பெயரை நான் கூறமாட்டேன். அவர் பந்தை எடுத்தால் எப்போதும் அதே இடத்திலேயே வீசுவார். நானும் அதைத்தான் செய்கிறேன். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர் கூட இதையே செய்வார். ஆனால் நான் சொன்னது போல் எப்போதும் நம்மையும் மிஞ்சுவதற்கு ஒருவர் இருப்பார் என்ற உணர்வு நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆஸ்திரேலியாவின் டோட் முர்பி நான் பார்த்த ஒரு உதாரணம். நம்மில் பெரும்பாலோர் நாம் அழியாதவர்கள் என்று நினைக்கிறோம். நாம் அனைவரும் நமது கேரியரை முடிக்கும் போது நாம் பெரியவர்கள் என்று கருதுகிறோம் அல்லது நாம் தான் பெரியவர்கள் என்று நினைத்துக்கொள்கிறோம்”

இதையும் படிங்க:வீடியோ : என்னா மனுஷன்யா, இந்திய ரசிகர்கள் குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வார்னர்

“இந்தியாவில் கூட இந்த மாதிரியான மனநிலையும் சூப்பர் ஸ்டார் கலாச்சாரமும் உள்ளது. அதனால் நம் திரைப்படங்கள் கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டாக இருந்தாலும் யாராவது ஏதாவது சாதித்தால் அவர்களை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வைத்திருக்கிறோம். எனவே அவர்கள் அதனுடன் ஒத்துப்போவார்கள். நமது மனிதகுலத்தின் முக்கிய பிரச்சனை ஈகோ. அவர்களில் பலர் தங்கள் ஈகோவை ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் விஷயம் ஈகோவை மீண்டும் கொண்டு வரும்” என்று கூறினார்.

Advertisement