வீடியோ : என்னா மனுஷன்யா, இந்திய ரசிகர்கள் குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வார்னர்

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 – 1 (4) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் கேப்டன் பட் கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகியதால் 4 – 0 (4) என்ற கணக்கில் நிச்சயமாக ஒயிட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 3வது போட்டியில் கொதித்தெழுந்து மகத்தான வெற்றி பெற்று தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.

மேலும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் டிரா செய்து அத்தொடரை திருப்திகரமாக நிறைவு செய்த ஆஸ்திரேலியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் மார்ச் 17ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

- Advertisement -

என்னா மனுஷன்யா:
பட் கமின்ஸ் இன்னும் இந்தியாவுக்கு திரும்பாத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் தொடர்ந்து இத்தொடரில் ஆஸ்திரேலியா விளையாடும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2வது போட்டியில் காயமடைந்து வெளியேறிய நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதால் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி இந்த ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளார்.

கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இந்திய ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட அவர் பலமுறை பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களின் பிரபல பாடல்களுக்கு நடனமாடுவது பிரபல நடிகர்களை போல் தனது முகத்தை மாற்றி அமைத்து வீடியோ வெளியிடுவது போன்ற கலகலப்பான விஷயங்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக விமானம் வாயிலாக இந்தியா வந்த அவர் மும்பைக்கு சென்றடைவதற்கு முன்பாகவே தனது காரில் பயணம் செய்யும் போது யார் என்றே தெரியாத மற்றொரு காரில் பயணம் செய்யும் இந்திய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்தியாவுக்கு வந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் மும்பையில் நடைபெற்ற வரும் மகளிர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் மெக் லென்னிங், ஷபாலி வர்மா போன்ற வீராங்கனைகளை சந்தித்த அவர் அவர்களுடன் மனம் விட்டு பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதை விட மும்பையில் உள்ள ஒரு தெருவில் அப்பகுதியில் வசிக்கும் இளம் குழந்தைகள் மற்றும் ரசிகர்களுடன் ஒன்றோடு ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடிய டேவிட் வார்னர் மகிழ்ந்தார். குறிப்பாக உள்ளூர் இந்திய ரசிகர் ஒருவர் பந்து வீச அதை அவர் பேட்டிங் செய்து எதிர்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி யார் என்று அடையாளம் தெரியாத இந்திய ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுடன் இனம் புரியாத அன்பை வெளிப்படுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய டேவிட் வார்னரை பார்க்கும் இதர இந்திய ரசிகர்கள் “என்னா மனுஷன்யா” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார்கள். மேலும் இப்படி இந்திய ரசிகர்களுடன் அவர் நெருக்கத்தை காட்டுவது புதிதல்ல என்பதால் இது நிச்சயமாக விளம்பரத்திற்கானது அல்ல என்றும் உறுதியாக சொல்லலாம்.

இதையும் படிங்க:வீடியோ : நீச்சல் குளத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ரிஷப் பண்ட் – அவரே வெளியிட்ட ஆறுதல் வீடியோ இதோ

மொத்தத்தில் பாகுபாடு பார்க்கும் நிறைய வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் இந்திய ரசிகர்களிடம் பாகுபாடுடின்றி பழகி வரும் காரணத்தாலேயே டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

Advertisement