வீடியோ : நீச்சல் குளத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ரிஷப் பண்ட் – அவரே வெளியிட்ட ஆறுதல் வீடியோ இதோ

Rishabh-Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவர் தற்போது மெல்ல மெல்ல தனது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வருகிறார். அவர் முற்றிலும் குணமாக ஒரு ஆண்டுக்கு மேலாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி என பல முக்கியமான தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று கூறலாம். ஏனெனில் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் போட்டியை எந்த நேரத்திலும் மாற்றும் வல்லமை படைத்தவர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னணிவு தான் என்பது சமீபத்தில் நடைபெற்று வரும் போட்டிகளிலேயே தெரிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மெல்ல மெல்ல தனது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வரும் ரிஷப் பண்ட் அவ்வப்போது அவர் செய்யும் சில விடயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் வீட்டிற்கு வெளியில் வந்து வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவை எதிர்த்து செயல்பட ஐசிசிக்கு தைரியம் இல்லையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி ப்ராட் ஹாக் 2 கேள்வி

அதனைத்தொடர்ந்து தற்போது நீச்சல் குளத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு அதனை வீடியோவாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்க்கையில் சற்று எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement