இந்தியாவை எதிர்த்து செயல்பட ஐசிசிக்கு தைரியம் இல்லையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி ப்ராட் ஹாக் 2 கேள்வி

Hogg
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூலை 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்ற லீக் சுற்றில் நடப்பு சாம்பியன், நியூசிலாந்து இங்கிலாந்து போன்ற அணிகள் தேவையான வெற்றிகளை பதிவு செய்ய தவறிய நிலையில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. குறிப்பாக கடந்த தொடரில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது போலவே மீண்டும் 2வது முறையாக இந்தியா தகுதி பெற்று அசத்தியுள்ளது.

IND vs AUS

மேலும் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சொதப்பி கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக நடைபெறும் 2023 ஐபிஎல் வரும் மே 28 வரை நடைபெற உள்ளதால் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு எப்படி சிறப்பாக தயாராகி கோப்பையை வெல்ல முடியும் என்ற குழப்பம் இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

தைரியம் இல்லையா:
இந்நிலையில் பொதுவாகவே அனைத்து ஐசிசி உலக கோப்பைகளிலும் லீக் சுற்று முடிந்ததும் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்று வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் நடத்தப்படுவது வழக்கமாகும். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் மட்டும் லீக் சுற்று முடிந்த பின் ஐபிஎல் தொடருக்காக 3 மாதங்கள் கழித்து நடத்துவது ரசிகர்களிடம் எந்த சுவாரசியத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஃபைனலும் இதே போல் நடைபெற்ற நிலையில் இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரை எதிர்த்து அதற்கு முன்கூட்டியே ஃபைனலை தைரியமாக நடத்தாமல் ஐசிசி என்ன செய்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை பொதுவான இடத்தில் அல்லாமல் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியின் நாட்டில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஐசிசி என்ன செய்து கொண்டிருக்கிறது? முதன்மை போட்டிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில் தற்போது நாம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இது ரசிகர்களுக்கு நல்லதல்ல. எனவே ஐசிசி தயவு செய்து கண் விழியுங்கள்”

- Advertisement -

“ஏனெனில் அதற்காக ரசிகர்களிடம் ஏற்பட்ட அனைத்து ஆர்வமும் ஃபைனலில் கோப்பை வெல்ல வேண்டும் என இரு அணிகளிடம் இருக்கும் நெருப்பும் தணிந்து விடும். குறிப்பாக மிகப்பெரிய ஐபிஎல் தொடருக்குப்பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் போது அனைவரும் அதிகப்படியான கிரிக்கெட்டை பார்த்திருப்பார்கள் என்பதால் அதில் அதிக ஆர்வத்தை காட்ட மாட்டார்கள். அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் பொதுவான இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அணியின் சொந்த மண்ணில் அது நடைபெற வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

Hogg

ஆனால் என்ன தான் ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் எப்போதுமே ஐசிசி நடத்தும் உலக கோப்பைக்கு ஒட்டுமொத்த உலக ரசிகர்கள் தனித்துவமான ஆர்வத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இங்கிலாந்தில் தற்போது குளிர்காலம் என்பதால் போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானம் முழுவதும் பனியால் நிரப்பப்பட்டுள்ளது. அதனாலேயே அந்நாட்டில் வெயில் காலமான ஜூன் மாதம் ஃபைனலை நடத்துவதற்கு ஏற்கனவே ஐசிசி திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்திய அணியில் அவங்க 2 பேரும் நல்லா விளையாடுவதை பாக்க நான் எதையும் செய்வேன் – மனம்திறந்த அஷ்வின்

அத்துடன் மற்ற உலக கோப்பையின் லீக் சுற்று ஒரே சமயத்தில் 10 அணிகள் ஒரே நாட்டில் மோதும் வகையில் நடைபெறும். ஆனால் இந்த உலகக் கோப்பையில் 2 வருடங்கள் அனைத்து அணிகளும் பல்வேறு நாடுகளில் மோதுவது போல் லீக் சுற்று நடைபெறுகிறது. அதனாலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் சொந்த மண் சாதகம் இருக்கக் கூடாது என்பதற்காக பொதுவான இடத்தில் ஐசிசி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement