இந்திய அணியில் அவங்க 2 பேரும் நல்லா விளையாடுவதை பாக்க நான் எதையும் செய்வேன் – மனம்திறந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தடுமாறி வந்த விராட் கோலி நான்காவது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 28-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன்னர் தமிழக வீரர் அஸ்வின் விராட் கோலியுடன் பேசியது குறித்த சில விடயங்கள் அவரே வெளிப்படுத்தியுள்ளார். அந்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகெங்கிலும் கொரோனா பரவிய காலத்தில் தனது பேட்டிங் பார்மை இழந்த விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதத்தை பதிவு செய்யாமல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தடுமாறி வந்தார். அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலி 71-வது சர்வதேச சதத்தையும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஒருநாள் தொடர்களில் மூன்று சதங்களை விளாசிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 74 சதங்களை எடுத்து தான் எந்த காலத்திற்கும் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பதை நிரூபித்து இருந்தார்.

- Advertisement -

ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதத்தை பதிவு செய்யாமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்க தவறிய அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஆண்டுகள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தமிழக வீரர் அஸ்வின் விராட் கோலியிடம் பேசியதை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அஸ்வின் கூறுகையில் :

நான் விராட் கோலி இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதாகவே உணர்ந்தேன். அவர் களத்தில் நீண்ட நேரம் விளையாடுகிறார். ஆனாலும் 30 ரன்கள் 40 ரன்கள் என்று நல்ல தொடக்கம் கிடைத்த பின்னர் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியது துரதிஷ்டவசமானது. இதைப் பற்றி எல்லாம் நான் பெரியதாக பேசிக் கொண்டது கிடையாது. ஆனால் இந்த நேரத்தில் அவரிடம் பேச வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஏனெனில் ஒரு நல்ல வீரர் நன்றாக விளையாடியும் தோற்றுப் போகிறார் என்றால் அவரின் தோள்களில் கை வைத்து அவரை பாராட்ட வேண்டியது அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலியிடம் சென்ற நான் : நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள். இன்னும் கூடுதலாக நேரத்தை எடுத்து விளையாடுங்கள். கண்டிப்பாக பெரிய ஸ்கோர் வரும் என்று கூறினேன். அந்த வகையில் விராட் கோலி சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று அஸ்வின் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் எனக்கு இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடுவது முக்கியமான ஒன்று.

இதையும் படிங்க : 3வது டெஸ்டில் இந்தியா தோற்க நான் போட்ட யூடியூப் வீடியோ தான் காரணமா? கலாய்த்து திட்டிய ரசிகர்களுக்கு அஷ்வின் பதிலடி

ஏனெனில் அவர்கள் இருவருமே இந்திய அணியின் சிறப்பான வீரர்கள். அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு கிடைத்த பிளஸ் பாயிண்ட். இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரிடம் இருந்து ரன்கள் வரவேண்டும். அவர்கள் இருவரும் நன்றாக விளையாடுவதை அமர்ந்து பார்க்க நான் எதையும் செய்வேன் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement