- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாரி அவரைத் தவிர பாபர் அசாம் போன்ற யாரும் கிங் கோலியுடன் ஒப்பிட தகுதியில்லாதவங்க.. அஸ்வின் பதிலடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீப காலங்களில் சுமாராக விளையாடி தோல்விகளுக்கு காரணமாக அமைந்த அவர் 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் ஷாஹீன் அப்ரிடி, நாசீம் ஷா ஆகியோருடன் ஓய்வு என்ற பெயரில் பாபர் அசாமை அந்நாட்டு வாரியம் கழற்றி விட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் 2019க்குப்பின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 25க்கும் குறைவான சராசரியில் சுமாராக பேட்டிங் செய்ததாக பாகிஸ்தான் ஃபகார் ஜமான் நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவிட்டார். இருப்பினும் அப்போது விராட் கோலியை இந்திய அணி பெஞ்சில் அமர வைக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாமை இப்படி நாம் ஒதுக்குவது சரியல்ல என்றும் ஃபகார் ஜமான் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:

இந்நிலையில் பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேன் என்றாலும் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறந்தவர் கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் உலகில் யாருமே விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் மட்டுமே அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகரானவர் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக வாய்ப்பு கொடுத்தால் க்ளாஸ் இருந்தால் பாபர் அசாம் ரன்கள் அடிப்பார். இந்த விவாதம் இத்தோடு நிறைவு பெற வேண்டும் என்று நான் நம்புகிறேன். முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே விராட் கோலி – பாபர் அசாமை ஒரே கருத்தில் இணைத்து பேசக்கூடாது. இப்படி சொல்வதற்காக (சாரி) மன்னிக்கவும்”

- Advertisement -

யாரும் நெருங்க முடியாது:

“பாபர் அசாமை நான் மதிப்பிடுகிறேன். அவர் நல்ல வீரர். ஆனால் விராட் கோலியின் நற்சான்றிதழ் வேறு ஒன்று. நிலப்பரப்புகளுக்கு அப்பால் காலங்களைக் கடந்து அழுத்தமான சூழ்நிலைகளில் விராட் கோலி செய்த விஷயங்களை உலகில் யாரும் நெருங்கவில்லை. எனக்குத் தெரிந்த வரை இந்த நேரத்தில் யாராவது அவரை நெருங்கினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் மட்டுமே” என்று கூறினார்.

இதையும் படிங்க: இதனால தான் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப் பட்டிருக்காரு.. ரோஹித் பேட்டி

அவர் கூறுவது போல 27000க்கும் மேற்பட்ட ரன்கள், 80 சதங்கள் குவித்துள்ள விராட் கோலி 2024 டி20 உலக கோப்பை ஃபைனல் உட்பட இந்தியாவுக்கு பல மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மறுபுறம் பாபர் அசாம் ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அழுத்தமான போட்டிகளில் அசத்தியதில்லை. எனவே பாபர் அசாம் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்திலேயே விராட் கோலி உள்ளார்.

- Advertisement -