இதனால தான் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப் பட்டிருக்காரு.. ரோஹித் பேட்டி

Rohit Sharma 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அந்தத் தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை பவுலராக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் பவுலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் பும்ரா தற்போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சரியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயத்தை சந்திக்க கூடியவர்கள் என்பதால் இந்திய அணியில் பெரும்பாலும் கேப்டன்ஷிப் பொறுப்பை பெறுவதில்லை.

- Advertisement -

துணை கேப்டன் பும்ரா:

அதையும் தாண்டி இன்றியமையாத வீரராக உருவெடுத்துள்ளதால் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் வருங்கால இந்தியாவின் கேப்டனாக கருதப்படும் வீரர்களில் ஒருவராக ஜஸ்ப்ரித் பும்ரா இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலயே தற்போது அவரை துணை கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளதாகவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். அவருடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடவில்லை. அவர் விளையாட்டை நன்றாக புரிந்துள்ளவர். கேப்டனாக அதிகம் செயல்படாததால் தந்ரோபாயமாக அவர் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை என்னால் சொல்ல முடியாது. இதுவரை அவர் ஒரு டெஸ்ட் மற்றும் சில டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார்”

- Advertisement -

வருங்கால கேப்டன்:

“ஆனால் அவரிடம் பேசும் போது கிரிக்கெட்டுக்கு என்ன தேவை என்பதை நன்றாக புரிந்துள்ளதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வருங்காலத்தில் ஒரு கேப்டன் முன்னோக்கி வரவேண்டும் என்று சூழ்நிலை உருவாகும் போது பும்ரா ஒருவராக இருப்பார் என்று நினைக்கிறேன். இளம் பவுலர்களிடம் பேசுவது அல்லது முன்னோக்கி எப்படி செல்வது என்பதைப் பற்றிய தலைமை விவாதத்தில் அவர் எப்போதும் இருப்பார். பும்ரா நல்ல அனுபவத்தையும் கொண்டுள்ளார். அணிக்குள் பவுலர்களுக்கிடையே பேசுவதற்கு அவரை துணை கேப்டனாக அறிவித்தது சரியான விஷயம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அந்த வெறுப்பே இல்லாமல் சூர்யகுமாரை பாண்டியா ஏத்துகிட்டாரு.. இந்தியாவின் டாமிசேன் பற்றி.. ப்ராட் ஹாக்

முன்னதாக 2022இல் ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து 5வது டெஸ்ட் மற்றும் 2023 அயர்லாந்து டி20 தொடரில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். மறுபுறம் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் சொந்த காரணத்திற்காக விலக உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அப்போது இந்தியாவை வழி நடத்துவதற்காகவே இப்போதே பும்ராவை பிசிசிஐ துணைக் கேப்டனாக அறிவித்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement