அவர மாதிரி ஸ்மார்ட்டான பிளேயர்.. கண்டிப்பா ஆஸி போட்டிக்கான இந்திய லெவனில் இருக்கணும்.. பியூஸ் சாவ்லா ஆதரவு

Piyush Chawla
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கடைசி நேரத்தில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. கடந்த 2011 உலகக்கோப்பை உட்பட பல்வேறு வெற்றிகளில் முக்கிய பங்காற்றி 700க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த அனுபவத்தை கொண்ட அவர் கடந்த 2 வருடமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் இந்த வாய்ப்பு அசாத்தியமற்றதாகவே இருந்து வந்தது.

இருப்பினும் குல்தீப், ஜடேஜா ஆகியோர் ஏற்கனவே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க இடது கை ஆஃப் ஸ்பின்னர் அவசியம் என்பதை உணர்ந்த தேர்வுக்குழு காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிறந்து வளர்ந்த சென்னை மண்ணில் நடைபெறும் முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

திருந்தாத ஆஸ்திரேலியா:
இந்நிலையில் தன்னுடைய அனுபவத்தால் மிகவும் சாமர்த்தியமான வீரராக இருக்கும் அஸ்வின் நிச்சயமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட வேண்டும் என்று பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக சொந்த ஊரான சென்னையில் நிச்சயமாக அஸ்வின் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“காயத்தால் அக்சர் பட்டேல் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்ற நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் அந்த இடத்தை நிரப்புவதற்கு சரியானவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் அவர் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் ஓரளவு சிறப்பாக செயல்படக்கூடிய அவர் தான் இந்த இடத்திற்கு சரியான மாற்று வீரர்”

- Advertisement -

“அத்துடன் அஸ்வின் மிகவும் ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர். வெள்ளைப் பந்து அல்லது சிவப்புப்பந்து என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர் எப்போதுமே சிந்தித்து செயல்படக்கூடிய சிறப்பான வீரர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2 வருடங்களாக விளையாடாமல் இருந்தாலும் நல்ல பவுலரான அவர் அணிக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார். ஆரம்பத்தில் அவர் விளையாடுவார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: சுயநினைவோட சொல்றேன்.. தோனி இல்லனா.. முட்டாள் கூட இதை செய்வாங்க.. அஸ்வின் செல்ஃபிஷ் பிளேயர் – எல்எஸ் மெகா விமர்சனம்

“இருப்பினம் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள அவர் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சென்னை மைதானத்தில் விளையாடும் 11 பேர் அணியில் இருக்க வேண்டும். மேலும் சென்னை சூழ்நிலைகளில் அதிக கிரிக்கெட்டில் விளையாடி நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் அதை சரியாக பயன்படுத்துவார்” என்று கூறினார்.

Advertisement