கும்ப்ளே மாதிரி இந்தியாவின் கேப்டனாகும் தகுதி அவர்கிட்ட இருக்கு – நட்சத்திர வீரரை பரிந்துரைக்கும் டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது. டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அத்தொடரின் 2வது போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்தும் போது விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் சொதப்பலால் 74/7 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் செயல்பட்டு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 42* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர்.

Ashwin

- Advertisement -

குறிப்பாக பரபரப்பான கடைசி நேரத்தில் அபாரமாக செயல்பட்டு பினிஷிங் செய்த அஸ்வின் மொத்தம் 54 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 2011இல் அறிமுகமாகி தன்னுடைய அபார திறமையால் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடிய பேட்டிங் அனுபவத்தை பயன்படுத்தி 5 சதங்களை விளாசி நிறைய தருணங்களில் ஆல் ரவுண்டராக அசத்தி வருகிறார்.

கேப்டன் தகுதி:
மேலும் 3000+ ரன்களையும் 400+ விக்கெட்களையும் அதிவேகமாக எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் தரவரிசையில் உலகின் நம்பர் 2 ஆல் ரவுண்டராக ஜொலித்து இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார். அதை விட பல தருணங்களில் விட்டுக் கொடுக்காமல் போராடுவதும் எதிரணிகள் விரிக்கும் வலையில் சிக்காமல் அவர்களுக்கே தோல்வியை பரிசளிக்கும் வகையில் அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் அவரை சிறந்த கிரிக்கெட் மூளை கொண்ட வீரராக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுகிறார்கள்.

Kumble

எடுத்துக்காட்டாக பாகிஸ்தானுக்கு எதிரான 2022 டி20 உலக கோப்பையில் கடைசி பந்தில் காலத்திற்கும் நின்று பேசும் அளவுக்கு சாதுரியமாக செயல்பட்ட அவரை விரேந்தர் சேவாக் சயின்டிஸ்ட் என்று சமீபத்தில் பாராட்டினார். அப்படி ஆல்-ரவுண்டராகவும் நல்ல நுணுக்கமும் கிரிக்கெட் மூளையும் கொண்டுள்ள அவர் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாகும் தகுதியைக் கொண்டுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா பாராட்டியுள்ளார். குறிப்பாக 2008இல் மூத்த வயதில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே கேப்டனாக செயல்பட்டதை சுட்டிக்காட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாகும் வீரர்களில் நிச்சயம் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒருவராக இருக்க வேண்டும். அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளது. அவர் தன்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். அவர் களத்தில் இருக்கும் போது எப்படி முன்னேறலாம் என்பதை பற்றி தொடர்ச்சியாக சிந்தித்துக்கொண்டே இருக்கிறார். இந்தியா மிகவும் அழுத்தத்தில் இருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் பதற்றமின்றி அமைதியாக விளையாடி கப்பலை நிலை நிறுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்”

Kaneria

“அதே போல பேட்டிங்கில் பலமுறை அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியுள்ளார். கடந்த காலங்களில் அனில் கும்ப்ளே இல்லாத இந்திய அணி எப்படி பலவீனமாக காட்சியளித்ததோ அதே நிலைமை அஷ்வினால் ஏற்பட்டுள்ளது. அவருடைய 42 ரன்கள் சதத்திற்கு சமமானது. மோனிமுல் ஹைக் சிறந்த வீரராக சில்லி பாய்ண்ட் திசையில் இதற்கு முன் நிறைய கேட்ச்களை பிடித்துள்ளார். இருப்பினும் அஷ்வினை அவர் தவற விட்டது வங்கதேசத்துக்கு தோல்வியை கொடுத்து விட்டது. அந்த சமயத்தில் கேட்ச் தவற விட்டது இந்தியாவுக்கு போட்டியை பரிசளித்தது போல் அமைந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்கPAK vs NZ : அசத்தும் பாக், முஹமது யூசுஃபை முந்திய பாபர் அசாம் – ரிக்கி பாண்டிங் சாதனையும் தகர்த்து புதிய உலக சாதனை

அவர் கூறுவது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2வது இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அஷ்வின் அனில் கும்ப்ளே போலவே இந்தியாவின் சாம்பியன் வீரராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் 2008இல் அனில் கும்ப்ளே கேப்டனாக இந்தியாவை வழி நடத்தியதை போல் அவரும் கேப்டனாகும் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழரான அவருக்கு பிசிசிஐ அந்த வாய்ப்பு கொடுக்குமா என்பதே சந்தேகம்.

Advertisement