2023 உலகக் கோப்பை : இறுதி இந்திய அணி அறிவிப்பு.. கடைசி நேரத்தில் நிகழ்ந்த மெகா மாற்றம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Rohit Sharma Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா பெற்ற சரித்திர வெற்றியை இம்முறை ரோகித் சர்மா தலைமை பெறுவதற்காக 15 பேர் கொண்ட கிரிக்கெட் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் அதில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சார் படேல் ஆகிய மூவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருந்ததால் எதிரணியில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னாரை தேர்வு செய்யாமல் தேர்வுக்குழு தவறு செய்து விட்டதாக சில முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

மெகா மாற்றம்:
எனவே உடனடியாக 2011 உலகக் கோப்பையில் போன்ற நிறைய வெற்றிகளில் பங்காற்றி சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை (712) எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்துள்ள ரவிச்சந்திரன் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அதில் மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் தனது அனுபவத்தை காட்டி சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

அந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட அணியை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்தது. இருப்பினும் அதற்குள் அக்சர் படேல் காயத்திலிருந்து குணமடையாததால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை செய்துள்ள தேர்வு குழு இறுதிக்கட்ட இந்திய அணியை ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளது.

- Advertisement -

அதனால் 2023 உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவார் என்று தற்போது ஐசிசி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் 2011, 2015 ஆகிய உலகக் கோப்பைகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ள காரணத்தால் கடைசி நேரத்தில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : மைதானத்தில் விராட் கோலி ஆடிய நடனத்தை பார்த்து. போட்டிக்கு பின் – ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பதிவு

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கான இறுதி கட்ட இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), இஷான் கிசான், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஷார்துல் தாகூர், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

Advertisement