IND vs AUS : மைதானத்தில் விராட் கோலி ஆடிய நடனத்தை பார்த்து. போட்டிக்கு பின் – ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பதிவு

Steve-Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியானது நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியை ருசித்தது.

என்னதான் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கையில் விராட் கோலி ஆடிய நடனம் குறித்த வீடியோ இணையத்தில் படுவைரலானது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் மைதானத்தில் இருந்த அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் அவ்வப்போது சற்று இளைப்பாறினர். ஒரு கட்டத்தில் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாடுகையில் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது ஸ்டீவ் ஸ்மித் சேரில் உட்கார்ந்து ஐஸ் கட்டிகளை வைத்து தனது உடல் சூட்டை தணித்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது சேரில் அமர்ந்திருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் லாபுஷேன் பேசிக் கொண்டிருந்தார். இப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தில் இருந்த அதிகப்படியான வெப்பத்தால் அவதிப்பட்ட வேளையில் முழு எனர்ஜியுடன் உற்சாகமாக இருந்த விராட் கோலி நேராக லாபுஷேனிடம் சென்று அவருக்கு எதிராக நடனமாடி ஏதோ ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : சூரியகுமார் அதுல இன்னும் சாதிக்கல.. அவசரப்பட்டு 2023 உ.கோ சான்ஸ் கொடுக்காதீங்க.. அந்த வேலைய அவங்களே செய்வாங்க.. சேவாக் பேட்டி

இந்த வீடியோ ஏற்கனவே இணையத்தில் வைரலாகியிருந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலி நடனமாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து : “நைஸ் மூவ், விராட் கோலி” என்று சிரிக்கும் எமோஜியை போட்டு தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement