முதல் டெஸ்டில் ஜடேஜா விலகியது ஏன்? பிசிசிஐ அறிவிப்பால் கிடைத்த அதிர்ஷ்டத்தில் வரலாறு படைப்பாரா அஸ்வின்

Ashwin and Jadeja 2
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளில் மழையால் சற்று தாமதத்துடன் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாக களமிறங்குவார் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதை விட இப்போட்டி நடைபெறும் சென்சூரியன் மைதானம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டதால் ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டும் தான் இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அஸ்வினுக்கு இடம்:
குறிப்பாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை விட பேட்டிங்கில் சற்று அதிகமாக ரன்கள் எடுக்கும் திறமை கொண்ட ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று நம்பப்பட்டது. அதிலும் குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை இறுதி போட்டியிலேயே அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதால் இப்போட்டியில் கண்டிப்பாக ரவிந்திர ஜடேஜா தான் விளையாடுவார் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.

அதற்கேற்றார் போல் கௌதம் கம்பீர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் அஸ்வினுக்கு பதிலாக தங்களுடைய உத்தேச 11 பேர் அணியில் ஜடேஜாவை தான் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்று காலை பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது ரவீந்திர ஜடேஜா தம்முடைய முதுகு பகுதியில் லேசான வலியை உணர்ந்ததாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதை மருத்துவ குழுவினர் சோதித்ததில் இப்போட்டியில் விளையாட முடியாத நிலைமைக்கு ரவீந்திர ஜடேஜா தள்ளப்பட்டது தெரிய வந்தது. அதன் காரணமாக இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா விலகுவதாக பிசிசிஐ அறிவித்ததை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தாமாகவே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அதிர்ஷ்டமாக கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைப்பாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தெ.ஆ மண்ணில் திணறும் ஹிட்மேன்.. ரோஹித் சர்மாவை அடக்குவத்தில் ரபாடா மாஸ் சாதனை

இதுவரை 489 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் இப்போட்டியில் மேற்கொண்டு 11 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைப்பார். அந்த நிலைமையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ஜெயிஸ்வால் 17, ரோஹித் சர்மா 5, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் இந்தியா 107/5 என தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement