தெ.ஆ மண்ணில் திணறும் ஹிட்மேன்.. ரோஹித் சர்மாவை அடக்குவத்தில் ரபாடா மாஸ் சாதனை

Rohit vs Rabada
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கியது. கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் மழையால் சற்று தாமதத்துடன் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வழங்கியதால் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்று தெரிவித்த கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாக களமிறங்குவதாகவும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே ரபாடா வேகத்தில் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

திணறும் இந்தியா:
குறிப்பாக தம்முடைய பலமான ஃபுல் ஷாட் அடிக்க முயற்சித்த போதிலும் தவறாக கணித்த காரணத்தால் ரோஹித் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதையும் சேர்த்து தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா முறையே 14, 6, 0, 25, 11, 10, 10, 47, 5 என வெறும் 128 ரன்களை 14.22 என்ற மோசமான சராசரியில் எடுத்து திணறி வருகிறார்.

மறுபுறம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ரோகித் சர்மாவை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற அபாரமான சாதனையை ககிசோ ரபாடா படைத்துள்ளார். இதுவரை ரோகித் சர்மாவை அவர் 13 முறை அவுட்டாக்கியுள்ள நிலையில் இதற்கு முன் நியூசிலாந்தின் டிம் சௌதீ 12 முறை அவுட்டாக்கியதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வாலை 17 ரன்களில் அவுட்டாக்கிய நன்ரே பர்கர் அடுத்ததாக வந்த மற்றொரு வீரர் சுப்மன் கில்லையும் 2 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார். அதனால் 24/3 என இப்போட்டியில் மிகவும் மோசமான துவக்கத்தை பெற்று இந்தியா திண்டாடி வருகிறது.

இதையும் படிங்க: வைரலாகும் ஆஸ்திரேலியர்களின் மகத்தான ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் லிஸ்ட்.. 3 இந்தியர்களுக்கு இடம்?

களத்தில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சரிவை சரி செய்வதற்காக போராடி வருகிறார்கள். வரலாற்றில் இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வெல்லாத குறையை இம்முறை போக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆனாலும் இப்படி ஆரம்பத்திலேயே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியா தடுமாற்றமான துவக்கத்தை பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement