வைரலாகும் ஆஸ்திரேலியர்களின் மகத்தான ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் லிஸ்ட்.. 3 இந்தியர்களுக்கு இடம்?

Australia Board
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள அந்த அணிக்கு எதிராக டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய முதல் நாள் முடிவில் 187/3 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 38, உஸ்மான் கவாஜா 42, மார்னஸ் லபுஸ்ஷேன் 43* ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி, ஆஹா சல்மான், அமீர் ஜமால் தலா 1 விக்கெட் எடுத்தனர். முன்னதாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போது ஆஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையை கேமராமேன் படம் பிடித்தார்.

- Advertisement -

ஸ்பின் ஆல் ரவுண்டர்:
அப்போது அங்கே ஒரு பெரிய வெள்ளைப் பலகையில் வரலாற்றின் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரண்டர்களின் பட்டியல் இருந்தது. அதை உற்று நோக்கிய போது அந்த பட்டியலில் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சார் கேரி சோபர்ஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் ஆகியோருடைய பெயர்கள் இருந்தது.

அந்தப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவின் பெயரும் 3வதாக இருந்த நிலையில் 5வது இடத்தில் மற்றொரு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் எழுதப்பட்டு அதன் அருகில் கேள்விக்குறியிடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிச்சி பெனட், இங்கிலாந்தின் சமித் பட்டேல் ஆகியோரின் பெயர்களும் இருந்தது. அந்த பட்டியலில் கடைசியாக இந்தியாவைச் சேர்ந்த அக்சர் படேல் பெயர் எழுதப்பட்டு அடிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஏதோ ஒரு காரணத்தை அல்லது பயிற்சி எடுப்பதற்காக வரலாற்றின் மகத்தான சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களின் பட்டியலை பலகையில் எழுதி ஆஸ்திரேலிய அணியினர் விவாதித்துள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து ரவீந்திர ஜடேஜா நேரடியாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்விக்குறியாகவும் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: அப்பாடா ஒருவழியா அஷ்வின் வயித்துல பாலை வார்த்த ரோஹித் சர்மா – தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து கிட்டத்தட்ட 500 விக்கெட்டுகள் எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல் ரவுண்டரா என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம் என பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அறிமுகமாகி வளர்ந்து வரும் அக்சர் படேலை இன்னும் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலியர்கள் அங்கீகரிக்காதது இதிலிருந்து தெரிவதாகவும் ரசிகர்கள் பேசுகின்றனர்.

Advertisement