அப்பாடா ஒருவழியா அஷ்வின் வயித்துல பாலை வார்த்த ரோஹித் சர்மா – தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி

Ashwin-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கியது. இதுவரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்கிற குறையை போக்கி இம்முறை வரலாறு படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து காத்திருக்கின்றனர்.

அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட புத்துணர்ச்சியுடன் கூடிய இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்று விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

- Advertisement -

அதோடு உலக அளவில் அதிவேகமாக 500 விக்கெடுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைக்க காத்திருக்கிறார். பொதுவாகவே வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கோலி கேப்டனாக இருந்தபோது ஜடேஜாவுக்கே முன்னுரிமை அளித்து ரவிச்சந்திரன் அஸ்வினை பெஞ்சில் அமர வைப்பார்.

இதையும் படிங்க : உங்களால் கங்குலி மாதிரி வர முடியாது.. பாகிஸ்தான் அணியை விளாசிய முன்னாள் ஆஸி வீரர்

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை அமர வைத்துவிட்டு ரோகித் சர்மா அஸ்வினை விளையாட வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement