உங்களால் கங்குலி மாதிரி வர முடியாது.. பாகிஸ்தான் அணியை விளாசிய முன்னாள் ஆஸி வீரர்

Kerry O'keefee
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு துவங்கியது. கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் துவங்கிய அப்போட்டியில் ஏற்கனவே முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 187/3 ரன்கள் எடுத்தது. முதல் நாளில் பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 38, உஸ்மான் கவாஜா 42, மார்னஸ் லபுஸ்ஷேன் 43* ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி, ஆஹா சல்மான், அமீர் ஜமால் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

கங்குலி மாதிரி வருமா:
முன்னதாக நம்பர் 25ஆம் தேதியான நேற்று கிறிஸ்மஸ் தினம் கோலாலமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியினருக்கு பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினர் அதிகாரபூர்வமாக வாழ்த்துக்களுடன் இனிப்புகளை நேரடியாக சென்று வழங்கினர். குறிப்பாக பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் கையில் இனிப்புகள் அடங்கிய கூடைகளை ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் குழந்தைகளுக்கும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தது வைரலாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் போட்டியிடுவதற்கு பதிலாக இப்படி இனிப்புகளை கொடுத்து நட்பு பாராட்டினால் எப்படி வெல்ல முடியும் என்று பாகிஸ்தான் அணியின் இந்த செயலை முன்னாள் வீரர் கெரி ஓ’கேபி விமர்சித்துள்ளார். குறிப்பாக 2001 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மகத்தான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்’கை டாஸ் வீசுவதற்காக ஒவ்வொரு முறையும் காத்திருக்க வைத்து கடுப்பேற்றிய இந்திய கேப்டன் கங்குலியை நினைவு கூர்ந்த அவர் இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது.

- Advertisement -

“இந்த டெஸ்ட் தொடர் நட்பு ரீதியாக நடைபெறுகிறதா? நீங்கள் ஆஸ்திரேலியாவை நட்பு ரீதியாக தோற்கடிக்க விரும்பவில்லையா? நேற்று கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுத்தீர்கள். இதே சூழ்நிலையில் சௌரவ் கங்குலி இருந்தால் கிறிஸ்மஸ் தினத்தன்று இது போன்ற பரிசுகளை ஸ்டீவ் வாக்’கிற்கு கொடுத்திருப்பாரா? கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டார்”

இதையும் படிங்க: மீண்டும் அல்வா கேட்ச்சை கோட்டை விட்ட பாகிஸ்தானை.. பந்தாடிய வார்னர்.. ஸ்டீவ் வாக்’கை முந்தி அபார சாதனை

“நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களத்தில் விறுவிறுப்பாக விளையாட வேண்டும். கோபமாக செயல்பட வேண்டும். ஆனால் இந்த செயல் மிகவும் இனிமையாக இருக்கிறது” என்று கூறினார். அதாவது ஆஸ்திரேலியா அபாரமாக செயல்பட்ட போது அசராமல் ஆக்ரோஷமாக இந்தியாவை தலைமை தாங்கிய கங்குலி 2001இல் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்தார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோசமாக செயல்படுவதை விட்டுவிட்டு இப்படி நட்பு பாராட்டினால் வெல்ல முடியாது என்று அவர் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement