ஷாகிப்புக்கு ஒரு நியாயம்.. மேத்யூஸ்க்கு ஒரு நியாயமா? சர்ச்சை அவுட் பற்றி அஸ்வின் கருத்து

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர் அஏஞ்சலோ மேத்யூஸ் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தது காலத்திற்கும் மறுக்க முடியாத சர்ச்சை நிகழ்வாக அரங்கேறியது. அதாவது தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங் செய்வதற்காக வந்த மேத்யூஸ் கடைசி நேரத்தில் தனது ஹெல்மெட் பழுதாகியிருந்ததை பார்த்தார்.

அதனால் வழக்கம் போல தம்முடைய ஹெல்மெட்டை அவர் மாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் புகார் செய்த வங்கதேச அணியினர் அவுட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதை சோதனை செய்த நடுவர்கள் 2 நிமிடத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ள தவறியதால் மேத்யூஸ் அவுட் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது அனைவரிடமும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அஸ்வின் கருத்து:
அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் மன்கட் அவுட்டை விட மிகவும் கேவலமான முறையில் தம்மை அவுட்டாக்கிய வங்கதேசம் மற்றும் சாகிப் மேல் வைத்திருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்தார். அத்துடன் களத்திற்குள் தாம் 2 நிமிடத்திற்குள் வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் சமர்ப்பித்த அவர் நடுவர்கள் தமக்கு தவறான தீர்ப்பை வழங்கியதாக கோபத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் மேத்யூஸ் போல யாருமே அவுட்டாக விரும்ப மாட்டார்கள் என்று மன்கட் அவுட்டை அதிகாரப்பூர்வமாக ஐசிசி மாற்றும் அளவுக்கு கிரிக்கெட்டின் விதிமுறைகளை நுணுக்கமாக பேசக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் அதே போட்டியில் ஷாகிப் தம்முடைய உபகரணத்தை மறந்து விட்டு மீண்டும் எடுக்க சென்ற போது அதற்கு அதே நடுவர்கள் விதிமுறையை பின்பற்றாமல் அனுமதி கொடுத்ததாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ஒரு தரப்பினர் விதிமுறைகளைப் பற்றி பேசும் நிலையில் மற்றொரு தரப்பினர் கிரிக்கெட்டின் நேர்மைத் தன்மையை பேசுகின்றனர். மேத்யூஸ் பேட்டிங் செய்ய வந்த போது ஹெல்மெட் பழுதாக இருந்ததால் அதை மாற்றுவதற்கு விரும்பினார். அதே போலவே சாகிப் தன்னுடைய பாதுகாப்பு உபகரணத்தை எடுத்து வராத நிலையில் மீண்டும் அதை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட வீடியோவை நான் பார்த்தேன்”

இதையும் படிங்க: ஐடியா இல்லாத மேத்யூஸ்.. அதை செஞ்சுருந்தா அவமானப்படிருக்க வேண்டிதில்ல.. டிகே பேட்டி

“இது இரு நாடுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட போராக மாறிவிட்டது. மேத்யூஸ் காலதாமதம் செய்வதாக ஷாகிப் கேட்டதால் நடுவர்கள் ஒப்புக்கொண்டு அவுட் கொடுத்தனர். மேலும் மேத்யூஸ்க்கு நடுவர்கள் டைம் அவுட் விதிமுறை பற்றி முன்னதாகவே எச்சரிக்கை கொடுத்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் மேத்தியூஸ் அப்படி அவுட்டானதற்காக அதிருப்தியடைந்தார். யாருமே அவ்வாறு அவுட்டாவதை விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement