ஐடியா இல்லாத மேத்யூஸ்.. அதை செஞ்சுருந்தா அவமானப்படிருக்க வேண்டிதில்ல.. டிகே பேட்டி

Dinesh Karthik
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிகெட் தொடரில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனையை படைத்தது மிகப்பெரிய சர்ச்சையாக அமைந்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக தன்னுடைய ஹெல்மெட் பழுதாகியிருந்ததை கடைசி நேரத்தில் பார்த்தார்.

அதனால் தம்முடைய அணியினரிடம் வேறு ஹெல்மெட் வாங்கிக் கொண்டிருந்த அவர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேச அணியினர் அவுட் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் வெளியேறிய பின் அடுத்த பேட்ஸ்மேன் அதற்கடுத்த 2 நிமிடத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியதால் மேத்யூஸ் அவுட் கொடுக்கப்படுவதாக அறிவித்தார்கள்.

- Advertisement -

ஐடியா இல்லாத மேத்தியூஸ்:
அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் சாகிப் அல் ஹசன் மற்றும் வங்கதேசம் அணியினர் மீதுருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்தார். மேலும் 2 நிமிடங்களுக்குள் களத்திற்கு வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் சமர்ப்பித்த அவர் தமக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு நியாயமும் கேட்டார்.

மறுபுறம் மனசாட்சின்றி நடந்துக்கொண்ட ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியினர் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். அதே சமயம் சர்வதேச கிரிக்கெட்டில் பல வருடங்களாக விளையாடி வரும் மேத்யூஸ் களமிறங்குவதற்கு முன்பாக தம்முடைய உபகரணங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்காமல் அஜாகிரதையாக இருந்ததால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது சரியானதே என்றும் சில ரசிகர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அப்போட்டியில் களமிறங்கிய மேத்தியூஸ் முதல் பந்தை எதிர்கொண்ட பின் ஹெல்மெட்டை மாற்றியிருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அந்தளவுக்கு மேத்யூஸ் களத்தில் விழிப்புணர்வுடன் செயல்படாமல் அவமான பெயரை பெற்றதாக தெரிவிக்கும் அவர் வங்கதேசமும் இப்படி செய்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: உலகத்துல யாருமே இப்படி வீச மாட்டாங்க.. அவரோட அவுட் ஸ்விங்கை தொடவே முடியாது.. மேக்ஸ்வெல் வியப்பான பாராட்டு

“ஒருவேளை மேத்யூஸ் ஒரு பந்தை எதிர்கொண்டு பின்னர் ஹெல்மெட்டை கேட்டிருந்தால் எதுவுமே நடந்திருக்காது. அந்த சமயத்தில் அவர் களத்தில் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் மேத்யூஸ் உட்பட யாருமே தங்களுடைய கனவில் கூட டைம்ட் அவுட் விதிமுறையை வங்கதேச அணியினர் கேட்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அது மிகவும் முக்கியமானது” என்று கூறினார். மொத்தத்தில் இலங்கை மற்றும் வங்கதேச ஆகிய இரு அணிகளுமே சுமாராக செயல்பட்டு இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement