- Advertisement -
ஐ.பி.எல்

2026 ஐ.பி.எல் தொடரில் தோனி எந்த இடத்தில் விளையாடுவார்? அஷ்வின் வெளியிட்ட கணிப்பு – விவரம் இதோ

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சி.எஸ்.கே அணியின் இந்த மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதற்கு முக்கிய காரணமே அணி தேர்வில் உள்ள குறைபாடு தான் என்றும் பலரும் பேசி வந்தனர்.

தோனி எந்த இடத்தில் விளையாடுவார் : ரவிச்சந்திரன் அஷ்வின் கணிப்பு

இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு பிற்பாதியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கிய சிஎஸ்கே அணியானது 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திலும் பல்வேறு இளம் வீரர்களை போட்டி போட்டு ஏளத்தில் எடுத்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட சி.எஸ்.கே அணி இந்த 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருக்கும் மகேந்திர சிங் தோனி நிச்சயம் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்றும் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய இருக்கிறார்? என்பது குறித்து முன்னாள் சி.எஸ்.கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தோனி தற்போதே தீவிர பயிற்சியை தொடங்கிவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : திலக் வர்மா வரமாட்டார்.. ஷ்ரேயாஸ் ஐயரே இந்த தொடரில் நீடிப்பார்.. பி.சி.சி.ஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அவரை பார்ப்பதற்கு மிகவும் உடற்தகுதியுடன் இருக்கிறார் என்பது தெரிகிறது. எனக்கு அவரைப் பார்க்கும்போது ஒன்பதாவது இடத்தில் களமிறங்குவார் என்று தோன்றவில்லை. இம்முறை மூன்றாவது வீரராகவே அவர் களமிறங்குவார் என்று தோன்றும் அளவிற்கு அவரது பயிற்சி மும்முரமாக இருக்கிறது என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -