
இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு புள்ளி பட்டியலில் மேல் இடத்தில் இருக்கும் அனைத்து அணிகளுக்கும் கோப்பையை வெல்வதற்கான சாதகம் இருப்பதால் இந்த தொடர் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைய இருக்கும் வேளையில் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இதுவரை தங்கள் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறது.
எனவே அந்த அணி கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். அதை தவிர்த்து மீதமுள்ள மூன்று இடங்களில் எந்தெந்த அணிகள் தேர்வாகும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள்? குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொருத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ஆர்.சி.பி அணி ஆகியவை பிளே ஆப் வாய்ப்பிற்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதி. அதோடு கடைசி இரண்டு இடங்களுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிக மோசமான சாதனையை முதல் அணியாக பதிவு செய்த – டெல்லி கேபிட்டல்ஸ்
முதல் இரண்டு இடங்களில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் உறுதியாகியாகும் வேளையில் அடுத்த இரண்டு இடங்களுக்கு குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியை வீழ்த்தியதால் சி.எஸ்.கே அணி தகுதி பெறுவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.