ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிக மோசமான சாதனையை முதல் அணியாக பதிவு செய்த – டெல்லி கேபிட்டல்ஸ்

DC
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 2026 சீசன் தற்போது அற்புதமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் விறுவிறுப்பாக நடைபெற்றுவதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான 51-வது லீக் போட்டியானது நடைபெற்று முடிந்தது.

டெல்லி அணி நிகழ்த்திய மோசமான சாதனை :

இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்யாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அடுத்ததாக 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 147 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தங்களது பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான ஒரு சாதனையை முதல் அணியாக பதிவு செய்துள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த 2026 சீசனில் தாங்கள் சந்திக்கும் ஏழாவது தோல்வியாக இந்த தோல்வியை பதிவு செய்த டெல்லி அணி ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் வரலாற்றில் 277 போட்டிகளில் விளையாடி 150வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் மீண்டும் உயிர்பெற்ற கே.கே.ஆர் அணியின் பிளேஆப் வாய்ப்பு – விவரம் இதோ

இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும், 150 தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் இந்த மோசமான சாதனையை டெல்லி அணி பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு அடுத்து பஞ்சாப் அணி 144 தோல்வியுடன் இரண்டாவது இடத்திலும், ஆர்.சி.பி அணி 137 தோல்விகளுடன் மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா அணி 133 தோல்விகளுடன் நான்காவது இடத்திலும், மும்பை அணி 130 தோல்வியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement