இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றினை தற்போது இந்த தொடரானது வேகமாக நகர்ந்து வரும் வேளையில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றிற்கு தகுதிபெறும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த தொடரின் தற்போதைய நிலையில் சன் ரைசர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
பிளே ஆப் வாய்ப்பை உயிர்பெற வைத்த கே.கே.ஆர் :
அதனால் அந்த அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று வாய்ப்பை இன்னும் ஓரிரு போட்டியில் வெற்றி பெற்றால் உறுதி செய்துவிடும். அவர்களை தவிர்த்து மற்ற மூன்று இடங்களை பிடிக்கப்போகும் அணிகளுக்கு இடையே தற்போது கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால் இனிவரும் கடைசி கட்ட லீக் போட்டிகள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் கிங்ஸ், ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்போது பிற்பாதியில் தோல்விகளை சந்தித்து வரும் வேளையில் முன்னர் தோல்விகளை சந்தித்து வந்த சில அணிகள் தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளன. இதன் காரணமாக தற்போது பிளே ஆப் சுற்றுக்கான போட்டியும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை மீண்டும் உயிர்பெற வைத்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் தற்போது கொல்கத்தா அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியல் ஏழாவது இடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க : இரண்டாவது நியூசிலாந்து வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் பின் ஆலன் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
இவ்வேளையில் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெறும் பட்சத்தில் 17 புள்ளிகளை பெற்று பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். அதே வேளையில் இந்த நான்கு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த வாய்ப்பு என்பதால் இனி வரும் போட்டிகள் கே.கே.ஆர் அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



