டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இரண்டாவது நியூசிலாந்து வீரராக பின் ஆலன் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக பத்தும் நிசாங்கா 50 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 39 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு கொள்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியானது போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 147 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக பின் ஆலன் 100 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 33 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன் 47 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 100 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் இரண்டாவது நியூசிலாந்து வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. கே.கே.ஆர் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – அக்சர் படேல் வருத்தம்
இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள வேலையில் நேற்று தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் முன்னாள் நியூசிலாந்து வீரரான பிரெண்டன் மெக்கல்லம்க்கு அடுத்து சதம் அடித்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.



