2024 ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம்போகப்போகும் வீரர் இவர்தான் – தமிழக வீரர் அஷ்வின் கணிப்பு

Ashwin
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு கோடை காலத்தில் 17-வது சீசன் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கு முன்னதாக தற்போது அந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் செய்யப்பட்ட வீரர்கள் என அனைத்து வகையான பட்டியலையும் வெளியிட்டு விட்டன.

இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் பதிவு செய்திருந்தாலும் ஏலத்தில் 333 வீரர்களே இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் துபாயில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த மினி ஏலத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திர வீரர்களின் பெயர்கள் ஏலத்திற்கு வர இருக்கின்றன. 333 பேர் ஏலத்தில் இடம்பெற்றிருந்தாலும் தற்போதைக்கு 70 வீரர்கள் மட்டுமே 10 அணிகளாலும் வாங்கப்படுவார்கள் என்றும் அதில் 30 வெளிநாட்டு வீரர்களும், 40 இந்திய வீரர்களும் அடங்கும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போகப்போகும் வீரர் யார்? இந்திய வீரர்களில் எந்த வீரர் அதிக தொகையை பெறுவார்? என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளன.

- Advertisement -

அந்த வகையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்வரும் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் மிட்சல் ஸ்டார் தான் இம்முறை அதிக விலைக்கு ஏலம் போவார் என்று தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர் இம்முறை மீண்டும் கம்பேக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வேடிக்கையாக வாயில் காயமடைந்த இந்திரஜித்.. கட்டு போட்டுக் கொண்டு தமிழ்நாட்டின் வெற்றிக்கு போராடிய வீர செயல்

கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் பெங்களூரு அணிக்காக அவர் விளையாடியிருந்தாலும் அதன் பிறகு தொடர்ச்சியாக பணிச்சுமை காரணமாக ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காமல் இருந்தார். இடையில் 2018-ஆம் ஆண்டு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாலும் அந்த தொடரை அவர் காயம் காரணமாக தவறவிட்டார். அதனை தொடர்ந்து தற்போது 2024-ல் தான் அவரது பெயரை பதிவு செய்துள்ளார். அடிப்படை விலையாக 2 கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட இவரது தொகை நிச்சயம் 15 கோடி வரை செல்லும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.

Advertisement