வேடிக்கையாக வாயில் காயமடைந்த இந்திரஜித்.. கட்டு போட்டுக் கொண்டு தமிழ்நாட்டின் வெற்றிக்கு போராடிய வீர செயல்

Baba Indrajith
- Advertisement -

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் மற்றும் காலிறுதி சுற்றில் வெற்றி கண்ட தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. சௌராஷ்டிராவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 293/7 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹிமான்சு ராணா சதமடித்து 116* ரன்களும் யுவராஜ் சிங் 65 ரன்களும் எடுத்த நிலையில் தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 3, சாய் கிஷோர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு முடிந்தளவுக்கு போராடியும் 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வெற்றிக்காக போராட்டம்:
குறிப்பாக தமிழகத்திற்கு பாபா அபாரஜித் 7, நாராயன் ஜெகதீசன் 30, நிஷாந்த் 1, விஜய் சங்கர் 23 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினார்கள். அதனால் மிடில் ஆர்டரில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் அரை சதமடித்து 64 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 31, சாய் கிசோர் 29 ரன்களும் எடுத்துப் போராடியும் தமிழகத்தால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஃபைனல் சென்ற ஹரியானா சார்பில் அதிகபட்சமாக கம்போஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்து பாத்ரூம் சென்ற போது அங்கே துரதிஷ்டவசமாக பாபா இந்திரஜித் வழுக்கி கீழே விழுந்ததாக தெரிகிறது. அதனால் தம்முடைய வாயில் கடுமையான காயங்களை சந்தித்த அவர் அதற்காக கவலைப்படாமல் 53/3 என தமிழ்நாடு தடுமாறிய போது முதலுதவிகளை மட்டும் செய்து கொண்டு வாயில் கட்டு போட்டு விளையாட வந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

குறிப்பாக மும்பைக்கு எதிரான கடந்த காலிறுதி போட்டியில் சதமடித்து தமிழ்நாட்டை வெற்றி பெற வைத்த அவர் இம்முறையும் காயத்துடன் வலியை பொறுத்துக் கொண்டு 64 ரன்கள் எடுத்து முடிந்தளவு வெற்றிக்கு போராடியது நெஞ்சங்களை தொட்டது. அந்த வகையில் வெற்றியை பதிவு செய்யாவிட்டாலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் காயத்தை தாண்டி தமிழ்நாட்டுக்காக போராடிய அவரின் வீர செயல் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: 41 பந்தில் 50.. முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. மீண்டும் சொதப்பிய பாகிஸ்தானை பொளந்த வார்னர்

இதை தொடர்ந்து வெற்றி பெறாதது ஏமாற்றத்தை கொடுப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ள பாபா இந்திரஜித் போட்டியை முடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று காயத்தை சோதித்து வாயில் தையல்களை போட்டுள்ளதாக தற்போது பதிவிட்டுள்ளார். அதனால் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டுமென தமிழக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement