41 பந்தில் 50.. முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. மீண்டும் சொதப்பிய பாகிஸ்தானை பொளந்த வார்னர்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதி துவங்கியது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு பெர்த் நகரில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதில் டேவிட் வார்னர் சற்று அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய உஸ்மான் கவஜா 16வது ஓவரில் அமீர் ஜமால் வீசிய ஒரு பந்தில் ஃபுல் ஷாட் அடிக்க முயற்சித்து டாப் எட்ஜ் கொடுத்தார். அப்போது நேராக மேலே சென்ற அந்த பந்தை பிடிப்பதற்காக பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் ஸ்லிப் பகுதியிலிருந்து ஓடினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அதிரடி துவக்கம்:
அந்த வகையில் தம்முடைய கைகளை நோக்கி அழகாக வந்த பந்தை அவர் பிடித்து விடுவார் என்று நினைத்து கவாஜா பெவிலியன் நோக்கி நடையை கட்ட துவங்கினார். ஆனால் கைக்கு வந்த கேட்ச்சை ஷபிக் கோட்டை விட்டதால் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்த போதிலும் கவாஜா மகிழ்ச்சியுடன் மீண்டும் பேட்டிங் செய்தார்.

குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் குறைவான ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை இதே போல பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டதை பயன்படுத்திய டேவிட் வார்னர் கடைசியில் 163 ரன்கள் அடித்து நொறுக்கி தோல்வியை கொடுத்தார். அந்த உலகக் கோப்பை முடிந்து இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட முடியாத நிலையில் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் இப்படி எளிதான கேட்ச்சை நழுவ விட்டு சொதப்பியதை பயன்படுத்திய ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அந்த வகையில் வெறும் 41 பந்துகளில் 50 ரன்கள் கடந்த அவர் சாகின் அப்ரிடி வீசிய ஒரு பந்தில் டி20 போல லெக் சைட் திசையில் விழுந்து கொண்டே அசால்ட்டான சிக்ஸரை பறக்க விட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். மொத்தத்தில் எளிதான கேட்ச்சை பாகிஸ்தான் தவற விட்டதை பயன்படுத்தி 126 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான துவக்கம் கொடுத்த கவாஜா 41 ரன்களில் ஷாஹின் அப்ரிடி வேகத்தில் அவுட்டானார்.

இதையும் படிங்க: 3 ஆவது டி20 போட்டிக்கு முன்னதாக அணியில் இருந்து விலகிய 2 முக்கிய வீரர்கள் – வெளியான அறிவிப்பு

ஆனால் மறுபுறம் அசத்தி வரும் டேவிட் வார்னர் 75* ரன்களுடன் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக இத்தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் அவர் சதமடித்து தன்னுடைய கேரியரை சொந்த மண்ணில் கெத்தாக நிறைவு செய்யும் முனைப்புடன் விளையாடி வருகிறார்.

Advertisement