3 ஆவது டி20 போட்டிக்கு முன்னதாக அணியில் இருந்து விலகிய 2 முக்கிய வீரர்கள் – வெளியான அறிவிப்பு

IND-vs-RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது முதல் கட்டமாக அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த வேளையில் அந்த போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இன்று டிசம்பர் 14-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்க காத்திருக்கிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் களம் காண்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேறியுள்ள தகவல் வெளியாகி இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கி உள்ளது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜெரால்டு கோட்சே மற்றும் மார்கோ யான்சன் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் அவர்கள் இருவரும் அந்த தொடருக்கு தயாராக போதிய அவகாசம் தேவை என்பதால் இந்த கடைசி டி20 போட்டியிலிருந்தது வெளியேறி உள்ளார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக இன்றைய போட்டியில் இரண்டு புதுமுக வீரர்கள் அறிமுகமாக இருக்கின்றனர் என்றும் தென்னாப்பிரிக்க அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

இப்படி முக்கிய 2 வீரர்கள் விலகியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை தரவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் இந்திய அணியிலும் இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அதன்படி சுப்மன் கில் வெளியேற்றப்பட்டு ருதுராஜ் கெய்க்வாடும், குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவி பிஷ்னாயும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement