3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND-vs-RSA
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த வேளையில் அந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்த தொடரில் ஒரு வெற்றியுடன் தற்போது முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது போட்டி டிசம்பர் 14-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிகழும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் துவக்க வீரரான சுப்மன் கில் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு இரண்டாவது டி20 போட்டியின் போது சற்று சுமாரான பந்து வீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னாய் இடம்பெறுவர் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ முன் அதை சரிசெய்ங்க.. இந்திய அணியின் பிரச்சனை குறித்து பார்திவ் படேல் கவலை

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிங்கு சிங், 6) ஜிதேஷ் சர்மா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவி பிஷ்னாய், 9) முகமது சிராஜ், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகேஷ் குமார்.

Advertisement