2024 டி20 உ.கோ முன் அதை சரிசெய்ங்க.. இந்திய அணியின் பிரச்சனை குறித்து பார்திவ் படேல் கவலை

Parthiv Patel
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 2வது போட்டியில் தோற்ற இந்தியா இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்து தங்களுடைய தரத்தை நிரூபிக்க டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

முன்னதாக போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் மழையால் 15 ஓவரில் 152 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 13.5 ஓவரிலேயே தோல்வியை கொடுத்தனர். அதில் மற்ற பவுலர்களை காட்டிலும் அர்ஷிதீப் சிங் 2 ஓவரில் 31 ரன்களை 15.50 என்ற படுமோசமான எக்கனாமியில் வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

6வது பவுலர் தேவை:
அதை விட அர்ஷிதீப், ஜடேஜா, முகேஷ் குமார், குல்தீப், சிராஜ் ஆகிய 5 முதன்மை பவுலர்களும் தடுமாறிக் கொண்டிருந்த போது 6வது பவுலராக யாரையுமே சூரியகுமார் யாதவ் பயன்படுத்தவில்லை. சொல்லப்போனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் 6வது பவுலராக பயன்படுத்துவதற்கு தகுதியான பகுதி நேர பவுலர் இல்லாமல் இந்தியா தடுமாறியது.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக 6வது பவுலர் பிரச்சனையை இந்திய அணி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென பார்த்தீவ் பட்டேல் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை பற்றி இந்திய அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அதாவது உங்களுடைய முதன்மை பவுலர்கள் ரன்களை கொடுக்கும் போது நிலைமையை சமாளிக்க 6வது பவுலர் அவசியம்”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக இன்றைய போட்டியில் அர்ஷிதீப் 2 ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கினார். இது போன்ற சூழ்நிலைகளில் 6வது பவுலர் இல்லாமல் உங்களால் இலக்கை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்” என்று கூறினார். அத்துடன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் சுமாராக செயல்படுவதற்கான காரணத்தை பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ வாய்ப்பை பிடிக்க கேஎல் ராகுல் போடும் மாஸ்டர் பிளான்.. கேரியரை மாற்ற 2 முக்கிய முடிவு

“அறிமுகமானது முதல் அவர் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் தடுமாறிய அவரை இத்தொடரில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்ய பார்க்கிறார்கள். இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் அவர் முதல் பந்திலேயே பாபர் அசாமை அவுட் செய்த திறமை கொண்டவர். ஆனால் அங்கே இருந்த இன்ஸ்விங் இங்கே அவருக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement