2024 டி20 உ.கோ வாய்ப்பை பிடிக்க கேஎல் ராகுல் போடும் மாஸ்டர் பிளான்.. கேரியரை மாற்ற 2 முக்கிய முடிவு

KL Rahul
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2019க்குப்பின் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி 3 வகையான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் முதன்மை துவக்க வீரராக உருவெடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் மெதுவாக விளையாட துவங்கிய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு அவர் 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய விதம் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானது. அதனால் தம்முடைய துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பையும் பறிகொடுத்தார்.

- Advertisement -

புதிய முடிவு:
அந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் காயமடைந்தது அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக மாறியது. ஏனெனில் அதன் காரணமாக விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்ற அவர் அதை கச்சிதமாக பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாட துவங்கினார். அதைத்தொடர்ந்து ஐபிஎல் 2023 தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அபாரமாக செயல்பட்டு மீண்டும் தன்னுடைய மதிப்பையும் ஃபார்மையும் மீட்டெடுத்துள்ளார்.

இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையில் இளம் அணியை பிசிசிஐ களமிறக்க முடிவெடுத்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கு கேஎல் ராகுல் அணி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக இஷான் கிஷனுக்கு பதிலாக அடுத்ததாக நடைபெறும் 7 டெஸ்ட் (தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) போட்டிகளிலும் மிகவும் கடினமான விக்கெட் கீப்பர் வேலையை செய்வதற்கு கேஎல் ராகுல் தயாராக இருப்பதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதே போல 2024 ஐபிஎல் தொடரிலும் லக்னோவுக்காக மிடில் ஆர்டரில் விளையாட ராகுல் முடிவெடுத்து அந்த அணி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ வாய்ப்பை பிடிக்க கேஎல் ராகுல் போடும் மாஸ்டர் பிளான்.. கேரியரை மாற்ற 2 முக்கிய முடிவு

அதாவது 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடி தான் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரராக ராகுல் சாதனை படைத்தார். எனவே ஐபிஎல் தொடரிலும் மிடில் ஆர்டரில் விளையாடி நன்றாக செயல்பட்டால் தமக்கு மீண்டும் 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ராகுல் கீப்பராக விளையாட உள்ளார். அதற்கு முன் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் கீப்பராக விளையாடி தேர்வுக்குழுவிடம் நற்பெயரையும் நம்பிக்கையும் பெறுவதற்காக ராகுல் இந்த முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement