உட்காந்துட்டு நீங்க ரொம்ப ஈஸியா பேசுறது வலிக்குது, 2023 உ.கோ பற்றி ரசிகர்கள் – கபில் தேவ் விமர்சனத்துக்கு அஸ்வின் வேதனை பதில்

Kapil Dev Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் எப்போதுமே புலியாக செயல்பட்டு வரும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பையாவது பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்திக்கும் தொடர் தோல்விகளை நிறுத்தமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் முக்கிய போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கைவிடும் கதை கொஞ்சமும் மாறவில்லை என்பது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் படுதோல்வியில் பிரதிபலித்தது.

அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா போன்ற கருப்பு குதிரை முக்கிய வீரர்கள் இன்னும் முழுமையாக குணமடைந்து விளையாடாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போக உலகக்கோப்பை துவங்க இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இறுதிக்கட்ட அணியை களமிறக்காமல் சோதனை முயற்சியில் ஈடுபட்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 வருடங்கள் கழித்து இந்தியா தோற்றதும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அஸ்வின் ஆதங்கம்:
அப்படி சமீப கால தோல்விகளிலிருந்து எந்த பாடத்தையும் கற்காமல் அதே சொதப்பல்கள் அரங்கேறுவதால் இம்முறையும் இந்தியா கோப்பையை வெல்லப்போவதில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நம்பிக்கையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே போல இப்போதுள்ள வீரர்கள் பணத்திற்காக ஐபிஎல் தொடரில் காயமடைந்தாலும் முழுவதுமாக விளையாடுவதாகவும் நாட்டுக்காக ஓய்வெடுப்பதாகவும் ஜாம்பவான் கபில் தேவ் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உலகிலேயே இந்தியா தான் மிகவும் கடினமாக உழைக்கும் அணி என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் பார்க்காமல் எப்போதும் வெற்றியை மட்டுமே எதிர்பார்க்கும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்திய அணியினரின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காமல் விமர்சிப்பது வேதனையளிப்பதாக தெரிவிக்கும் அஸ்வின் சவாலான 2023 உலகக் கோப்பையை வெல்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக அணிக்குள் நடப்பதை அறியாமல் வெளியில் உட்கார்ந்து கொண்டு எளிதாக விமர்சித்து பேசுவது தங்களைப் போன்ற வீரர்களுக்கு வேதனையை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. ” தோல்வியை சந்தித்த நாளில் நாம் நன்றாக இருந்திருக்க என்ன செய்ய வேண்டும்? அது போன்ற சூழ்நிலையில் நமக்கு அதிகப்படியான நேர்மறையான அம்சங்கள் மட்டுமே அவசியமாகும். குறிப்பாக தோல்வியை சந்திக்கும் நாட்களில் பொதுமக்கள் நமக்கு பின்னால் இருந்து ஆதரவு கொடுப்பார்கள் என்று வீரர்கள் கருத வேண்டும்”

“அந்த உதவியால் அவர்கள் போட்டி நாளன்று தங்களுடைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். உலகில் நீங்கள் இந்தியாவை போன்ற கடினமாக உழைக்கும் வேறு அணியை பார்க்க முடியாது. குறிப்பாக நம்முடைய அணியில் இருப்பவர்கள் உடல் பயிற்சி கூடத்தில் களத்திலும் எந்தளவுக்கு கடினமான பயிற்சிகளை எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். எனவே வெளியில் அமர்ந்து கொண்டு விமர்சிப்பது மிகவும் எளிதானதாகும். அது போன்ற விமர்சனங்களை பார்ப்பது எனக்கு வலியை கொடுக்கிறது”

- Advertisement -

“நீங்கள் நமது வீரர்கள் எவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லையா? எனவே இந்த வீரர்கள் மீது ஆதரவான நேர்மறையான சிந்தனைகளை செலுத்துங்கள். அதை செய்தாலே முடிவுகளும் நேர்மறையாக அணியை பார்த்துக் கொள்ளும். ஒருவேளை நம்முடைய அணி வெல்லாவிட்டாலும் அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கு ஆதரவு கொடுங்கள். அத்துடன் உலகக் கோப்பை வெல்வதற்கு அனைத்து அணிகளும் வருகின்றன”

இதையும் படிங்க:இதெல்லாம் எந்த கொம்பனாலும் முடியாது – சர்வதேச கிரிக்கெட்டில் உடைக்கவே முடியாத 5 உலக சாதனைகளின் பட்டியல்

“நாங்களும் உலக கோப்பையை வெல்லக்கூடாது என்று செல்வதில்லை. அதை வென்றால் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் உலகக் கோப்பையை வெல்வது மிகவும் கடினமான வேலையாகும். குறிப்பாக விமர்சகர்கள் நினைப்பது போல அது எளிதானதல்ல. நாம் அது போன்ற தொடர்களில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுகிறோம். இருப்பினும் அந்த குறிப்பிட்ட போட்டியில் நாம் வெற்றி பெறும் அளவுக்கு அசத்துவதில்லை” என்று கூறினார்.

Advertisement