இதெல்லாம் எந்த கொம்பனாலும் முடியாது – சர்வதேச கிரிக்கெட்டில் உடைக்கவே முடியாத 5 உலக சாதனைகளின் பட்டியல்

Sachin-and-Kohli
- Advertisement -

உலகில் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் சிலர் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தங்களுடைய நாட்டுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருங்கால தலைமுறைக்கு சவால் விடும் வகையிலான சாதனைகளை படைத்து விடை பெறுவார்கள். இருப்பினும் வல்லவனுக்கு வல்லவன் இருப்பார் என்பது போல் ஒரு தலைமுறையில் சிறப்பாக செயல்பட்டவர்களை மிஞ்சும் வகையில் அடுத்த தலைமுறையில் வருபவர்கள் அபாரமாக செயல்பட்டு அவர்கள் படைத்த சாதனைகளையும் உடைப்பது வழக்கமாகும்.

அதே சமயம் சாதனைகள் என்பதே வருங்காலத்தில் உடைப்பதற்காக படைக்கப்படுகிறது என்று வல்லுநர்கள் தெரிவித்தாலும் சில சாதனைகள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உடைப்பதற்கு அசாத்தியமற்றதாக இருந்து வருகிறது. அவற்றை வருங்காலத்தில் கொம்பதி கொம்பன் போன்ற வீரர்களாலும் உடைக்க முடியாது என்று சொல்வதற்கான காரணங்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. டான் ப்ராட்மேன் 99.94: ஆஸ்திரேலியாவின் மகத்தான முன்னாள் வீரரான ப்ராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் 6996 ரன்களை 99.94 என்ற மிரள வைக்கும் சராசரியில் குவித்துள்ளார். சொல்லப்போனால் தம்முடைய கடைசி இன்னிங்க்ஸில் டக் அவுட்டானதால் 100 சராசரியை தொடும் வாய்ப்பை இழந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரியை கொண்ட வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

1948லேயே படைக்கப்பட்ட அந்த சாதனை 75 வருடங்கள் கடந்தும் சச்சின், லாரா போன்ற மகத்தானவர்கள் வந்தும் இன்னும் உடைக்கப்படாமல் இருக்கிறது. சொல்லப்போனால் கடந்த 75 வருடங்களில் யாருமே 70 என்ற பேட்டிங் சராசரியை கூட தொட முடியவில்லை. மேலும் தற்போது அதிகப்படியாக டி20 போட்டிகள் நடைபெறுவதால் எண்ணிக்கையில் குறைந்து போய்யுள்ள டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ராட்மேன் மேல் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 100 என்ற சராசரியை யாராலும் தொட முடியாது என்றே சொல்லலாம்.

- Advertisement -

2. பிரையன் லாரா 400*: கடந்த 2004இல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் 778 நிமிடங்கள் நின்று 582 பந்துகள் எதிர்கொண்டு மராத்தான் இன்னிங்ஸ் விளையாடிய லாரா 400* ரன்களை விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையும் முறியடிக்க முடியாது என்று சொல்வதற்கு 2 காரணங்களை சொல்லலாம்.

முதலில் தற்போது டி20 கிரிக்கெட்டில் விளையாட பழகியுள்ள வீரர்கள் அவ்வளவு பெரிய இன்னிங்ஸ் விளையாடுவது மிகவும் கடினமாகும். மற்றொன்று 2019 அடிலெய்ட் டெஸ்டில் 335* ரன்களை டேவிட் வார்னர் குவித்த போது கேப்டன் டிம் பெயின் டிக்ளேர் செய்தது போல அணியின் நலனுக்காக பெரும்பாலான கேப்டன்கள் 400 ரன்களை தொடுவதற்கு முன்பாக டிக்ளேர் செய்து விடுவார்கள்.

- Advertisement -

3. முத்தையா முரளிதரன் 1300: இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 534 ஒருநாள், 800 டெஸ்ட், 13 டி20 என மொத்தமாக 1347 விக்கெட்களை சாய்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார்.

ஆனால் இப்போதெல்லாம் நிறைய பவுலர்கள் அடிக்கடி காயத்தை சந்தித்து தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பையே பெறாத நிலைமையில் ரசிகர்களை கவர்வதற்காக பந்து வீச்சுக்கு எதிரான விதிமுறைகளும் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்களும் அமைக்கப்பட்டு வருகிறது. அதனால் கத்தி மேல் நடப்பது போல் நவீன கிரிக்கெட்டில் விளையாடி வரும் பவுலர்கள் 1347 விக்கெட்களை எடுத்து முரளிதரனின் சாதனையை தகர்ப்பது அசாத்தியமாகும்.

- Advertisement -

4. நாயகன் சச்சின்: சர்வதேச கிரிக்கெட்டில் 664 போட்டிகளில் 34357 ரன்களை எடுத்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக ஜொலித்து வருகிறார். அவரை தவிர்த்து வேறு யாருமே 30000 ரன்களை தொடாத நிலைமையில் தற்போது 501 போட்டிகளில் 25582 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி அவற்றை உடைக்க வாய்ப்புள்ளது என்றாலும் அதற்கான சாத்தியம் குறைவாகும்.

ஏனெனில் 16 வயதில் அறிமுகமாகி சச்சின் அந்த சாதனைகளை படைத்த நிலையில் தற்போது 34 வயதாகும் விராட் கோலி தனது கேரியரை நீட்டிக்க வரும் வருடங்களில் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றாலும் கூட வருங்காலத்தை கருத்தில் கொண்டு டி20 கிரிக்கெட்டில் அவரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. எனவே சச்சினின் அந்த இரட்டைக் கனி சாதனைகளை உடைப்பது விராட் கோலி உட்பட அனைவருக்குமே கடினமாகும்.

5. ரோஹித் சர்மா 264: கடந்த 2014ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கையை புரட்டி எடுத்த ரோகித் சர்மா 264* ரன்கள் விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக உலக சாதனை படைத்தார். அப்போட்டியில் இலங்கை சில கேட்ச்களை கோட்டை விட்ட அதிர்ஷ்டம் கிடைத்தது போல் அனைவருக்கும் கிடைக்காது என்பதுடன் அந்த காலகட்டங்களில் கடைசி 10 ஓவர்களில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே வெளியே நிற்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

இதையும் படிங்க:IND vs WI : இளம் இந்திய அணி தாங்குமா? டி20 தொடரில் அடித்து நொறுக்க – காட்டடி வீரர்கள் நிறைந்த மாஸ் வெ.இ அணி அறிவிப்பு

ஆனால் அது தற்போது 5 ஃபீல்டர்களாக மாற்றப்பட்டுள்ளதால் அந்த சாதனை மட்டுமின்றி அதிக இரட்டை சதங்கள் (3) அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் மற்றுமொரு உலக சாதனையையும் முறியடிப்பதற்கும் வாய்ப்பில்லை.

Advertisement