IND vs WI : இளம் இந்திய அணி தாங்குமா? டி20 தொடரில் அடித்து நொறுக்க – காட்டடி வீரர்கள் நிறைந்த மாஸ் வெ.இ அணி அறிவிப்பு

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் போராடி வென்றது. 1975, 1979 ஆகிய வருடங்களில் நடந்த அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் சமீப காலங்களாகவே தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதன் உச்சகட்டமாக இந்தியாவின் நடைபெறும் 2023 உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மெகா வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அந்த சூழ்நிலையில் 2வது போட்டியில் பதிவு செய்த வெற்றி மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்தது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் அடுத்த வருடம் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. பொதுவாகவே கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் காட்டுத்தனமாக அடிக்கும் வீரர்களை கொண்டிருப்பதால் சற்று அதிக வெற்றிகரமாக செயல்படும் வெஸ்ட் இண்டீஸ் 2012, 2014 டி20 உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.

- Advertisement -

அதிரடியான அணி:
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி மீண்டும் டி20 கிரிக்கெட்டில் வெற்றி நடை போடுவதற்கு இந்த தொடரிலிருந்து தயாராக உள்ளது. ஆனாலும் இத்தொடரில் வலுவான இந்தியாவை அடித்து நொறுக்குவதற்கு தரமான வீரர்கள் தேவை என்பதால் அதற்கேற்றார் போல் மிகச் சிறந்த அணியை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் ஃபைனலில் சதமடித்து வெற்றி பெற வைத்த நிக்கோலஸ் பூரான் தேர்வு செய்யப்பட்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணியை பலப்படுத்தியுள்ளது.

அது போக கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக உலக சாதனை படைத்த ஜான்சன் சார்லஸ், கெய்ல் மேயர்ஸ் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களுடன் நம்பிக்கை நட்சத்திரம் சிம்ரோன் ஹெட்மயர், ப்ரெண்டன் கிங் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன்களும் தேர்வாகியுள்ளனர். இவர்களுடன் ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப் போன்ற தரமான வீரர்களும் ஓடென் ஸ்மித், ரோமாரியா செபார்ஃட் கடைசி நேரத்தில் களமிறங்கி அடித்து நொறுக்க கூடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன் அகில் ஹொசைன், ராஸ்டன் சேஸ் ஆகியோர் சுழல் பந்து வீச்சு துறையை வலுப்படுத்தும் நிலையில் அல்சாரி ஜோசப், ஓபேத் மெக்காய் வேகப்பந்து வீச்சு துறையை பலப்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விட இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடருக்காக தரமான வலுவான நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

மறுபுறம் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற பெரும்பாலும் இளம் வீரர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதனால் இந்த தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். மொத்தத்தில் ரோவ்மன் போவல் தலைமையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் களமிறங்க போகும் வெஸ்ட் இண்டீஸ் அணி இதோ:

இதையும் படிங்க:ஆஸியை பதம் பாத்தாச்சு, அடுத்த டார்கெட் இந்தியா தான் – 2024 தொடர் பற்றி பென் ஸ்டோக்ஸ் மறைமுகமான எச்சரிக்கை பேட்டி

ரோவ்மன் போவல் (கேப்டன்), கெய்ல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், சிம்ரோன் ஹெட்மயர், ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ப்ரெண்டன் கிங், சாய் ஹோப், அகில் ஹுசைன், அல்சாரி ஜோசப், ஓபேத் மெக்காய், நிக்கோலஸ் பூரான், ரோமாரியா செபார்ட், ஓடென் ஸ்மித், ஓசினோ தாமஸ்.

Advertisement