2023 உலக கோப்பை : சஞ்சு சாம்சனுக்கு கொடுக்க நினைச்சாலும் இடமில்ல, அந்த இளம் வீரரை செலக்ட் பண்ணுங்க – அஸ்வின் கோரிக்கை

Samson-and-Ashwin
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் இத்தொடர் துவங்க இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் பும்ரா, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் முழுமையாக குணமடைந்து களமிறங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அதை விட 2011 உலகக்கோப்பை வெற்றியில் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா ஆகிய 3 இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படி ஐசிசி போன்ற பெரிய தொடரில் இடது கை பேட்ஸ்மேன்களின் பங்கு முக்கியமாக இருந்து வரும் நிலையில் தற்போதைய அணியில் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா என டாப் 6 வீரர்களுமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது மற்றுமொரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை:
அதே சமயம் சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவாக காணப்படுகின்றன. இந்நிலையில் ஏற்கனவே வலது கை வீரர்களாக நிறைந்திருக்கும் இந்திய அணியில் டாப் 4 இடங்களில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சனுக்கு கொடுப்பதற்கு இடமில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். மறுபுறம் ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சவாலான பிட்ச்களில் இதர இந்திய பேட்ஸ்மேன்களை காட்டிலும் அறிமுகமாக களமிறங்கி அசத்திய திலக் வர்மா உலகக் கோப்பையில் தேர்வாக தகுதியானவராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக திலக் வர்மாவை இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரச்சனைக்கு தீர்வாக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் அரை சதமடித்தார். டி20 போட்டியில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் பெரும்பாலும் 3 அல்லது 5வது இடத்திலேயே விளையாடுவார். அதே சமயம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்”

- Advertisement -

“குறிப்பாக களமிறங்கியதுமே சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்வது அவருடைய ஸ்பெஷலாகும். அவரிடம் இருக்கும் திறமைக்கு போட்டியை மாற்றக்கூடியவர் என்பதை நாம் அறிவோம். எனவே நல்ல திறமை கொண்ட அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். ஆனால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஏனெனில் 3வது இடத்தில் விராட் கோலியும் துவக்க வீரர்களாக ரோஹித் – கில் ஆகியோரும் இருப்பார்கள் என்ற நிலைமையில் ஸ்ரேயாஸ் – கேஎல் ராகுல் ஆகியோர் ஃபிட்டாகி விட்டால் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள்”

“ஆசிய கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அவர்களுக்கு பேக்-அப் வீரர்களாக யார் இருப்பார்கள். ஒருவேளை அவர்களில் யாராவது விளையாடாமல் போனால் என்ன செய்வது என்பதாலேயே சஞ்சு சாம்சன் சோதிக்கப்பட்டு வருகிறார். அது போக அக்சர் படேலையும் அவர்கள் சோதித்து பார்த்தனர். இந்த சமயத்தில் திலக் வர்மாவை அவர்கள் ஒருநாள் அணியில் சேர்ப்பதை பற்றி யோசிப்பார்களா? ஏனெனில் வெஸ்ட் இண்டீஸில் அவர் விளையாடிய விதம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது”

இதையும் படிங்க:2023 உ.கோ, ஆசிய கோப்பை ஜெய்க்கலானாலும் பரவால்ல, அந்த கௌரவத்தை காப்பாதீடுங்க – இந்திய அணிக்கு தவான் கோரிக்கை

“அவர் ஒருநாள் அணிக்கான திட்டங்களில் இருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் கிட்டத்தட்ட அந்த இடத்தை நெருங்கியுள்ளார். ஏனெனில் சவாலான பிட்ச்சில் அவர் விளையாடிய இன்னிங்ஸை பார்க்கும் எந்த தேர்வுக்குழு உறுப்பினருக்கும் “வாவ்” என்றே சொல்ல தோன்றும்” என கூறினார்.

Advertisement