2023 உ.கோ, ஆசிய கோப்பை ஜெய்க்கலானாலும் பரவால்ல, அந்த கௌரவத்தை காப்பாதீடுங்க – இந்திய அணிக்கு தவான் கோரிக்கை

Shikhar Dhawan
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ்விரு அணிகள் மோதுவதால் அதை பார்ப்பதற்கு இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் அண்டை நாடுகளாக இருப்பதால் இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை போட்டியாக பார்க்காமல் கௌரவமாக கருதி வெற்றி பெறுவதற்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள்.

அதனால் அனல் பறக்கும் என்பதாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக பல சர்ச்சைகளை கடந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இவ்விரு அணிகளும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் லீக் சுற்றில் 1 முறை, சூப்பர் 4 சுற்றில் 1 முறை, ஃபைனல் என ஒரே மாதத்தில் 3 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

தவான் கோரிக்கை:
அது போக 50 ஓவர் உலகக்கோப்பையில் அக்டோபர் 14ஆம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதும் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையில் 1992 முதல் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் இம்முறை உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானை தோற்கடித்து கௌரவத்தையும் மானத்தையும் காப்பாற்றுமாறு இந்திய அணிக்கு நட்சத்திர வீரர் ஷிகர் தவான் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சூழ்நிலையில் எப்போதுமே நீங்கள் உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரும் விருப்பமாக இருக்கும்”

- Advertisement -

“ஆனாலும் நீங்கள் உலகக் கோப்பையை வெல்வதே முக்கியமாகும். கடவுளின் ஆசிர்வாதத்துடன் அதை நாம் செய்வோம் என்று நம்புகிறேன். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவடையும் போது கண்டிப்பாக ஒரு திருப்திகரமான எங்களுக்கு உணர்வு இருக்கும். ஏனெனில் நான் விளையாடிய போது பெரும்பாலும் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுள்ளோம். அந்த போட்டியில் எப்போதுமே எதிர்பார்ப்புகள் உச்சமாக இருக்கும். அத்துடன் பாகிஸ்தான் அணியுடனும் நாங்கள் சிலவற்றை பேசுவோம்” என்று கூறினார்.

இருப்பினும் இரு அணிகளுக்கும் சமமாக பேசாத காரணத்தால் அவர் பேசிய அந்த வீடியோவை முதலில் ட்விட்டரில் பதிவிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் பின்னர் டெலிட் செய்து விட்டது. இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற கடந்த ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் தோற்கடித்த நடப்பு இந்தியாவை முக்கியமான சூப்பர் 4 சுற்றில் வீழ்த்திய பாகிஸ்தான் ஃபைனலுக்கு தகுதி பெற விடாமல் வீட்டுக்கு அனுப்பியது. இருப்பினும் அதற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் மகத்தான இன்னிங்ஸ் உதவியுடன் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இதையும் படிங்க:2023 உ.கோ, ஆசிய கோப்பை ஜெய்க்கலானாலும் பரவால்ல, அந்த கௌரவத்தை காப்பாதீடுங்க – இந்திய அணிக்கு தவான் கோரிக்கை

அந்த வரிசையில் இந்த ஆசிய கோப்பையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானை தன்னுடைய முதல் லீக் போட்டியில் எதிர்கொள்ளும் இந்தியா அதைத்தொடர்ந்து 4ஆம் தேதி நேபாளை எதிர்கொள்கிறது. மொத்தத்தில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று ஆசிய கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இம்முறை 2023 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக 8வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement