கேப்டன்சியில் ஒரு தெளிவே இல்லாம இருக்காரு ஹார்டிக் பாண்டியா – ஆர்.பி சிங் விமர்சனம்

RP-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி கயானா நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செய்த ஒரு சில தவறுகளே தோல்விக்கு காரணம் என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி சிங் அக்சர் பட்டேலுக்கு பவுலிங் கொடுக்காதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் ஒரு தெளிவே இல்லாமல் இருக்கிறது. அக்சர் பட்டேல் என்ன ரோலில் விளையாடுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆனால் அவருக்கு இந்த போட்டியில் ஒரு ஓவர் கூட வழங்கவில்லை. ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவரை அணியில் வைத்துக்கொண்டு அவருக்கு ஓவரை வழங்காதது மிகவும் தவறு.

- Advertisement -

வெஸ்ட் இண்டிஸ் அணியின் சுழப்பந்து வீச்சாளரான அக்கீல் ஹூசேன் இடதுகை ஆட்டக்காரர்களுக்கு எதிராக தைரியமாக பந்து வீசினார். அதேபோன்று பாண்டியா அக்சர் படேலுக்கு வாய்ப்பினை வழங்கி இருக்க வேண்டும். அதேபோன்று சாஹல் பதினெட்டாவது ஓவரை வீசி இருக்க வேண்டும். அந்த ஓவரை ஏன் பாண்டியா அவருக்கு வழங்கவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : IND vs WI : வாழ்வா சாவா போட்டியிலாவது இஷானை கழற்றி விட்டு அந்த பயமற்றவக்கு சான்ஸ் கொடுங்க – வாசிம் ஜாபர் மீண்டும் கோரிக்கை

அதிலும் பாண்டியா தவறு செய்து விட்டார். முன்னதாக பதினாறாவது ஓவரை வீசிய சாஹல் அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். எனவே அவரே தொடர்ச்சியாக பந்து வீசியிருக்க வேண்டும் அதனையும் பாண்டியா செய்ய தவறிவிட்டார் என்று ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சி தவறுகளை ஆர்.பி சிங் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement