வருத்தமா இருக்கு.. இந்த ஆசை தான் பாகிஸ்தான் வீழ்ச்சிக்கு காரணம்.. அது வரை ஜெய்க்க முடியாது.. அஸ்வின் பேட்டி

- Advertisement -

1992 உலக சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் முதல் முறையாக தோற்றது. அதற்கு பொறுப்பேற்று பாபர் அசாம் தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட சாகின் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் பாகிஸ்தான் மீண்டும் தோல்வியை சந்தித்தது.

அதனால் ஒரே தொடருடன் அவரை அதிரடியாக நீக்கிய பாகிஸ்தான் வாரியம் மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் மீண்டும் 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதற்கு பொறுப்பேற்று 2வது முறையாக பாபர் அசாம் தன்னுடைய கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் விளக்கம்:

இதற்கிடையே ஷான் மசூத் தலைமையில் சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல் தங்களுடைய சொந்த இடத்துக்காகவும் கேப்டன்ஷிப் பதவிக்காகவும் போட்டியிடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு வித்திட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய உண்மையான நிலையைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தற்போதிருக்கும் நிலைமைக்காக நான் வருந்துகிறேன். மகத்தான வீரர்கள் விளையாடிய பாகிஸ்தான் சிறந்த அணியாக இருந்தது. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெருமையான நாடாகவும் இருந்தது. இப்போது அவர்களிடம் திறமையில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? இப்போதும் அவர்களிடம் நிறைய திறன் மிகுந்த வீரர்கள் உள்ளனர்”

- Advertisement -

கேப்டன்ஷிப் ஆசை:

“ஆனால் அவர்கள் கேப்டன்ஷிப் பதவியை இசை நாற்காலியை போல் மாற்றியுள்ளனர். அங்கே இசை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதால் அதை அதைப் பிடிக்க பலரும் நினைக்கிறார்கள். 2023 உலகக் கோப்பைபையில் தோற்றதால் பாபர் அசாம் ராஜினாமா செய்தார். ஷாஹீன் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த 1000 நாட்களுக்கு மேலாக பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்லவில்லை”

இதையும் படிங்க: 174 ரன்ஸ்.. ஸ்டப்ஸ் 81 பந்தில் அதிரடி.. டி20 தோல்விக்கு அயர்லாந்தை துவம்சம் செய்த தென் ஆப்பிரிக்கா

“அது கிட்டத்தட்ட 3 வருடங்கள். தற்சமயத்தில் பாகிஸ்தான் அணியின் உடைமாற்றும் அறையில் உள்ள ஒவ்வொரு வீரர்களிடமும் நிலையற்ற தன்மை இருக்கிறது. அவர்கள் தங்களைப் பற்றி நினைக்கிறார்கள். அணியை பற்றி குறைவாகவே நினைக்கின்றனர்” என்று கூறினார். அந்த வகையில் கேப்டன்ஷிப் பதவி ஆசையை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து விளையாடும் வரை பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Advertisement