- Advertisement -
இந்திய கிரிக்கெட்

20 வருஷம்.. வயசு காரணமில்லை.. தோனியின் முழங்கால் வலிக்கு இது தான் காரணம்.. அஸ்வின் உருக்கம்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த 2008 முதல் விளையாடி வரும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 42 வயதை கடந்து விட்ட அவர் சமீப காலங்களில் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி இம்முறை சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அத்துடன் சமீபத்திய வருடங்களில் அவர் பேட்டிங்கில் கீழ் வரிசையில் வந்து கடைசிக்கட்ட ஓவர்களை மட்டுமே எதிர்கொள்கிறார். இருப்பினும் அவருடைய அதிரடி பேட்டிங்கை பார்க்க 4, 5வது இடங்களில் பேட்டிங் செய்யுமாறு அவருக்கு பலரும் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

வயசு காரணமில்லை:
ஆனால் தம்முடைய முழங்கால் வலியால் தோனி மேலே பேட்டிங் செய்யவில்லை. இந்நிலையில் விக்கெட் கீப்பரான தோனி கடந்த 20 வருடங்களாக ஸ்டம்புக்கு பின்னால் உட்கார்ந்து எழுந்திருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனாலேயே முட்டி தேய்ந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு தோனி முழங்கால் வலியை சந்தித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

இருப்பினும் தம்மை கொண்டாடும் ரசிகர்களுக்காக அறுவை சிகிச்சையையும் தாண்டி தோனி விளையாடுவதாக கூறும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பொதுவாக ஒருவரின் முட்டி தேயாமல் இருக்க ஒரு விதமான திரவம் சுரக்கும். அந்த திரவம் சுரப்பது நின்று விட்டால் 2 எலும்புகளும் தேய்வதை தடுக்க முடியாது. அதனால் கடுமையான வலி ஏற்படும். தோனி கடந்த 20 வருடங்களாக விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார்”

- Advertisement -

“அதனால் அவர் ஒவ்வொரு போட்டியிலும் பெரும்பாலான பந்துக்கும் முட்டியை மடக்கி உட்கார்ந்து எழுந்திருப்பார். அதனாலேயே அவருடைய முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாக பெரும்பாலானவர்கள் 35 வயது கடந்தும் விக்கெட் கீப்பிங் செய்வதை நிறுத்தி விட்டு சாதாரண வீரர்களாக தொடர்வார்கள். அறுவை சிகிச்சையின் போது அந்த திரவத்தை தான் மருத்துவர்கள் தோனியின் முட்டுகளில் செயற்கையாக செலுத்தியுள்ளனர்”

இதையும் படிங்க: என்ன சிம்பிளா இருக்காரு மனுஷன்.. தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட் செய்த செயல் – விவரம் இதோ

“இருப்பினும் அவரால் பழைய முறைப்படி அதிகமாக நடக்கவோ பேட்டிங் செய்யவோ முடியவில்லை. அதையும் தாண்டி ரசிகர்களுக்காக தோனி களத்தில் நிற்கிறார். எனவே அந்த மூட்டு வலி பிரச்சனை கையாளும் அளவுக்கு இருந்தால் நிச்சயம் 2025 சீசனிலும் தோனி விளையாடுவார். ரசிகர்களுக்காக அவர் செய்யும் இந்த காரியத்தை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது” என்று தனது யூடியூப் பக்கத்தில் கூறினார்.

- Advertisement -