அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகுவதாக அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்த அவர் இனி குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பியதால் பிசிசிஐயும் அவரை தொடர்ச்சியாக பயிற்சியாளராக நீடிக்க கட்டாயப்படுத்தவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பை தொடரை வென்று கொடுத்த கையோடு இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.
அவருக்கு பின்னர் தற்போது புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். தலைமை பயிற்சியாளர் பதிவிலிருந்து விலகிய ராகுல் டிராவிட் சிறிது நாட்கள் ஓய்வுக்குப் பிறகு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண சென்றார்.
பின்னர் அங்கிருந்து நாடு திரும்பிய அவர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு கோப்பையையும் வழங்கி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் டிராவிட் செய்த ஒரு செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அந்த வகையில் நேற்று தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற ராகுல் டிராவிட் அங்கு இருந்த ஊழியர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க : மயங், அர்ஷ்தீப் கிடையாது.. ஆஸி மண்ணில் அசத்த இந்தியாவுக்கு அந்த இளம் பவுலர் தேவை.. பாண்டிங் பேட்டி
மேலும் சிறிது நேரம் பேட்டிங் செய்த அவர் தான் பேட்டிங் செய்த பிறகு அங்கிருந்த மைதான ஊழியர்களுக்கு பந்து வீசியும் உற்சாகப்படுத்தினார். இதுகுறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



