- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீழ்த்த முடியல.. அதுல ராக்கெட் போல அசத்தும் ஜடேஜாவை பாத்து பொறாமைப்பட்டு இதை கத்துக்கிறேன்.. அஸ்வின்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் சிஎஸ்கே அணியின் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். குறிப்பாக பேட்டிங்கில் 143-9 என முதல் இன்னிங்ஸில் தடுமாறிய போது அவர்கள் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள்.

அதே போல பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளும் ஜடேஜா 5 விக்கெட்டுகளும் எடுத்தனர். அந்த வகையில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்ட அவர்கள் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் மற்றுமொரு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா களத்தில் ராக்கெட் போல ஃபீல்டிங் செய்யும் திறமையுடையவர் என அஸ்வின் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஜடேஜா மீது பொறாமை:

மேலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறையிலும் அசத்தும் அவரைப் பார்த்து பொறாமைப்படுவதாகவும் அஸ்வின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொண்டு முன்னேறுவதாக தெரிவிக்கும் அஸ்வின் இருவரும் சகோதரர்களாக விளையாடுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சில நேரங்களில் ஒரே அணியில் இருந்தாலும் சக வீரர்களை தாண்டி நீங்கள் முன்னேற விரும்புவீர்கள். அது சகோதரர்கள் ஒரே கைகளில் வளர்வது போன்றது அல்லவா? அதன் பின் நீங்கள் ஒருவரை ஒருவர் மெதுவாக ரசிக்க விரும்புவீர்கள். தற்போது என்னால் எப்போதும் ஜடேஜாவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து அந்த ரசனை ஒரு படி மேலே சென்றுள்ளது”

- Advertisement -

ஜடேஜாவை வீழ்த்த முடியாது:

“எனவே நான் நானாக இருப்பதில் கச்சிதமாக உணர்கிறேன். ஆனால் ஜடேஜா என்ன செய்துள்ளார் என்பதைப் பார்த்து நான் உத்வேகமடைகிறேன். களத்தில் நெருப்பாக இருக்கக்கூடிய அவர் ராக்கெட் போல ஃபீல்டிங் செய்வார். எனவே அவர் மீது நான் பொறாமைப்படுகிறேன். ஆனால் அவரை நான் ரசிக்கிறேன். கடந்த காலங்களை விட சமீபத்திய 4 – 5 வருடங்களில் அவரை அதிகமாக ரசிக்கும் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்”

இதையும் படிங்க: எங்களிடமும் 2 பேர் இருக்காங்க.. இம்முறை ரிஷப் பண்ட்டை சைலன்ட் பண்ணி ஜெய்ப்போம்.. பட் கமின்ஸ் 

“ஜடேஜாவின் கதை உத்வேகம் கொடுக்கக் கூடியது. கடந்த 3 – 4 வருடங்களில் அவர் பேட்டிங் செய்ய செல்லும் போது இந்திய அணி நம்பிக்கையுடன் அமைதியாக இருப்பதை நான் உணர்ந்துள்ளேன். ஜடேஜா தன்னுடைய ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனையை சரி செய்து வெற்றியில் பங்காற்றுவது நமக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய கதையாகும்” என்று கூறினார்.

- Advertisement -