வரும் நவம்பர் மாதம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இப்போதே தயாராகி வருகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா வென்றது. அது போக 2014க்குப்பின் ஆஸ்திரேலியாவை சந்தித்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.
அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் 2018/19 தொடரில் சிட்னி மைதானத்தில் சதமடித்த அவர் 2020/21 தொடரில் மீண்டும் அதே மைதானத்தில் 90க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா போட்டியை டிரா செய்ய உதவினர்.
சைலன்ட் பண்ணுவோம்:
அதை விட காபாவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் அட்டகாசமாக விளையாடிய அவர் 89* ரன்கள் குவித்தார். அதனால் 32 வருடங்கள் கழித்து காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வங்கதேச டெஸ்ட் தொடரில் சதமடித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் போல தங்களுடைய அணியிலும் இந்தியாவை அடித்து நொறுக்க டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முறை 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மொத்த இந்தியாவையும் சைலன்ட் செய்தது போல ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்து வெற்றி பெறுவோம் என்று கமின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அதிரடியான ரிஷப் பண்ட்:
“ஒவ்வொரு அணியிலும் போட்டியை அதிரடியாக எடுத்துக் கொள்ளக் கூடிய சில வீரர்கள் இருப்பார்கள். அது போல எங்களிடம் டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் உள்ளனர். அவர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை கொஞ்சம் தவற விட்டாலும் அவர்களைப் போன்றவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள்”
இதையும் படிங்க: அந்த 2 வீரர்கள் இல்லாம இந்தியா விளையாட முடியாது.. பாகிஸ்தான் பிசிசிஐ பாத்து இதை கத்துக்கனும்.. கம்ரான் அக்மல்
“ரிஷப் பண்ட் போன்றவர் ரிவர்ஸ் லேப் ஷாட்டை விளையாடக்கூடும். அது அற்புதமான ஒன்று. அது அவருடைய அங்கம். சொல்லப்போனால் இப்போதெல்லாம் அது போன்ற ஷாட்டுகள் சாதாரணமாகி விட்டது. கடந்த 2 தொடர்களில் ரிஷப் பண்ட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனவே இம்முறை அவரை நாங்கள் அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்” என்று கூறினார்.



