10 பந்துல அதை செய்யும்.. எனக்கே டஃப் கொடுத்த சாய் சுதர்சன்.. தெ.ஆ தொடரில் அசத்துவாரு.. அஸ்வின் உறுதி

Ravichandran Ashwin 8
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் நிறைய இளம் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வான அவர் 2023 சீசன் ஃபைனலில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் அடித்து சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

அஸ்வின் உறுதி:
அதன் காரணமாக இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் தேர்வான அவர் இந்தியா ஏ அணிக்காக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதை தொடர்ந்து இராணி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் அசத்தியதால் தற்போது நாட்டுக்காக விளையாடுவதற்காக அவர் தென்னாபிரிக்க தொடரில் முதல் முறையாக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் நிறைய இளம் வீரர்களை தாம் 10 பந்துகளில் அவுட்டாக்கி விடுவேன் என்று ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால் சாய் சுதர்சன் தம்மை சமாளிக்க சரியான திட்டங்களை வகுத்து சிறப்பாக எதிர்கொண்டதாக பாராட்டும் அஸ்வின் தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“லோயர் டிவிஷன் போட்டிகளில் நான் விளையாடும் போது எனக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் சற்று கவலையுடன் விளையாடுவார்கள். அந்த வகையில் தன்னம்பிக்கை இல்லாமல் விளையாடும் எதிரணி பேட்ஸ்மேன்களை என்னால் 10 பந்துகளில் அவுட்டாக்க முடியும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் சாய் சுதர்சன் தன்னுடைய ஆட்டத்தின் திட்டங்களை அறிந்தவர். அதனால் அவர் பெரும்பாலும் என்னை லெக் சைட் திசையில் கச்சிதமாக விளையாடி விடுவார்”

இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான டாஸிற்கு பிறகு முக்கிய மாற்றத்தினை அறிவித்த – சூரியகுமார் யாதவ்

“மேலும் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் அவர் பவர் ஹீட்டிங், ஃபிட்னஸ் போன்ற நிறைய அம்சங்களை தன்னுடைய ஆட்டத்தில் சேர்த்து வருவதை நான் கவனித்து வருகிறேன். இம்முறை தென்னாப்பிரிக்காவில் பிட்ச் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் அங்கே அவர் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி அசத்துவார் என்று நம்புகிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement