தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான டாஸிற்கு பிறகு முக்கிய மாற்றத்தினை அறிவித்த – சூரியகுமார் யாதவ்

IND-vs-RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டர்பன் நகரில் நடைபெற இருந்த வேளையில் அங்கு பெய்த மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று செயின்ட் ஜார்ஜ் ஃபார்க் மைதானத்தில் இன்று டிசம்பர் 12-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் தங்களது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்னென்ன மாற்றம் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் காணப்பட்டது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்று விளையாடிய துவக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கழட்டி விடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று மூன்றாவது இடத்தில் இஷான் கிஷனுக்கு பதிலாக திலக் வர்மா அந்த இடத்தில் களமிறங்கியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னாய் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலா குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும் ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் கிடையாது. அதன்படி இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : பிக்பாக்கெட் அடிச்ச மாதிரி.. மும்பை அந்த வெ.இ பிளேயரை வாங்கிட்டாங்க.. அஸ்வின் வித்யாச பாராட்டு

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிங்கு சிங், 6) ஜிதேஷ் சர்மா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது சிராஜ், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகேஷ் குமார்.

Advertisement