ஃபைனலில் இந்தியாவை சாய்க்க ஆஸி போட்ட திட்டத்தை கேட்டு உறஞ்சு போயிட்டேன்.. அஸ்வின் பேட்டி

Ravichandran Ashwin 2
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்தை கொடுத்தது. ஏனெனில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் தோற்காமல் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது.

மறுபுறம் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பின் வெற்றி நடை போட்ட ஆஸ்திரேலியா முக்கியமான ஃபைனலில் கச்சிதமாக செயல்பட்டு வலுவான இந்தியாவை தோற்கடித்து தங்களுடைய அலமாரியில் 6வது கோப்பையை அடுக்கி உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. முன்னதாக பொதுவாகவே மாபெரும் அழுத்தம் நிறைந்த ஃபைனலில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுப்பதே வெற்றியின் தாரக மந்திரமாக இருக்கிறது.

- Advertisement -

வியக்கும் அஸ்வின்:
ஆனால் இம்முறை மாற்றி யோசித்த ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசி துல்லியமாக ஃபீல்டிங் செய்து இந்தியாவை சுருட்டி வெற்றி கண்டது. இந்நிலையில் அப்படி வித்தியாசமாக முதலில் பந்து வீசும் திட்டத்தை பற்றி பேட்டிங் செய்து முடித்ததும் நேரடியாக அகமதாபாத் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ஜார்ஜ் பெய்லியிடம் கேட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

அதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை வைத்து அகமதாபாத் மைதானத்தில் ஃபைனலுக்கு கொடுக்கப்பட்ட கருமண் பிட்ச் முதலில் பேட்டிங்க்கு சவாலாக இருக்கும் என்று அறிந்து கொண்டதாலேயே சேசிங் தேர்வு செய்ததாக ஜார்ஜ் பெய்லி தம்மிடம் கூறிய போது உறைந்து போனதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றிய அஸ்வின் பேசியது.

- Advertisement -

“பட் கமின்ஸ் சிறப்பாக பந்து வீசி விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுகளை எடுத்தார். கமின்ஸ் இந்த உலகக் கோப்பையில் சுமாராக விளையாடிய போதிலும் கடைசி 4 போட்டியில் அசத்தினர். தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியா என்னை முற்றிலும் ஏமாற்றி விட்டது. அதாவது இந்தியா பேட்டிங் செய்து முடித்ததும் முதலில் ஏன் வழக்கத்திற்கு மாறாக பந்து வீசினீர்கள்? என்று ஜார்ஜ் பெய்லியிடம் கேட்டேன்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் உடைக்கப் போகும்.. விராட் கோலியின் அபார சாதனை

“அதற்கு அவர் “நாங்கள் இங்கே அதிகப்படியான இருதரப்பு மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளோம். அப்போதெல்லாம் சிவப்பு மண் நன்றாக சிதைவதையும் இரவு நேரத்தில் கருப்பு மண் நன்றாக இருப்பதையும் தெரிந்து கொண்டோம். சிவப்பு மண்ணில் பனியின் தாக்கம் இல்லை. ஆனால் கருப்பு மண்ணில் மதிய நேரத்தில் நல்ல சுழலை இருப்பதுடன் இரவு நேரத்தில் கான்கிரீட் ரோடு போல இருப்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டோம்” என்று என்னிடம் சொன்னார். அது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது” என கூறினார்.

Advertisement